பக்கம்:உலகியல் நூறு.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxvi ஆல்ை, இயல்பாகவே உள்ளத்தில் அமைந்த ஒழுக்க வுணர்வே உயர்த்த நல்லொழுக்கமாகும் எனச் சுட்டும் நூலாசிரியர், அப்படிப்பட்ட நல்லொழுக்கமுங்கூட, மேற் சொன்ன பசி, தொழிலின்மை, கல்வியறிவின்மை ஆகியன எய்திய அந்தச் சூழலில், எவருக்கும் தெரியாதவாறு திருட்டுத் தனமாக வழுவி இடறும் என்கின்ருர் இக் கருத்தில் ஆசிரியர் முடிபாவது பசி நீக்கம், தொழில் வாய்ப்பு, கல்வி வாய்ப்பு ஆகிய மூன்றையும் கட்டாயமாக உருவாக்கித் தருவதொன் ருலேயே ஒருவனிடம் அல்லது ஒரு நாட்டுக் குடிகளிடம் ஒழுக்கத்தை உருவாக்கவும் நிலைப்புறுத்தவும் முடியும் என்பதே ஒன்று தவிர்த்துப் பிற உருவாக்குதலுங்கூட, ஒழுக்கக் கேட்டில் வழுக்கி, இழுக்கம் எய்திவிடும்படியான நிலேயையே உருவாக்கும் என்பதுவும் ஒர் உட்குறிப்பாகும் ! ' வழுக்கலிலா உள்ளத் தொழுக்கம் உயரொழுக்கம் ! ஆங்கது வும் கள்ளத்து இடறும் அக்கால் ' என்பதில் வரும் * கள்ளத்து இடறும் ' என்ற சொல்லாட்சி அரிய கருத்து நுட்பம் பொருந்திய தாகும். எங்கும் யார்க்கும் எதுவும் பொது ! ஒருபுறம், வருந்த வருந்த உடலுழைப்பில் பலர் கடுமை யாக ஈடுபடுகின்றனர் ! ஒருபுறம், உவக்க உவக்கப் பலர் தாம்பாட்டுக்கும் துய்ப்பதில் சலிக்க ஈடுபடுகின்றனர். ஒரு புறம் நாட்டின் அமைதி குலேயுமாறு இடையூறு புரிவதில் சிலர் காவாக ஈடுபடுகின்றனர் 1 நாட்டு இழுக்கு என்பதே இவை தாம் என்னும் நூலாசிரியர், பிறநிலை உடலுழைப்பு, வேளாண்மை, துய்ப்பு, ஏந்து ஆகிய இம்மூன்றையும் எங்கும் யார்க்கும் பொது ' என்று அமைத்து விடுதல் வேண்டும் என்று பொதுமையியலின் தொடக்கப் பாவிலேயே தம் உள் விருப்பை மலர்த்திக் காட்டுகின்ருர் ! இடம், குடி, பால், எண், காலம் ஆகிய எந்நிலயிலும் வேறுபாடில்லாதவாறு செல்வநுகர்ச்சியானது பொதுமை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/28&oldid=758194" இலிருந்து மீள்விக்கப்பட்டது