பக்கம்:உலகியல் நூறு.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxviii இந்த நான்கு வரிப் பாடற்கான விரிவாக்கப் பொருளே, பல ஆண்டுகட்கு முன்னரே, ஒருநாள் வரத்தான் போகி றது ' என்ற தலைப்பில் அழகிய இனிய சந்த யாப்பில் இந் நூலாசிரியர் புறப்படுத்தியுள்ளார் உள்ளத்தை உருக்கி உணர்வெழுச்சியை உசுப்பிவிடும் அரிய புறப்பாடல் அது ! (காண்க : கணிச்சாறு- 2-ஆம் தொகுதி. பா. எண் : 63) இன்ப துன்பமும் துன்ப இன்பமும் துன்ப நெருக்கத்தால் நாம் அறிந்து கொள்ளும் அறிவு இறப்பற்ற இன்பக் கல்வி என்பார் நூலாசிரியர் ! இன்பத் தோய்வால் உணர்வு நிலைகளே மட்டுமே நம்மால் பெற முடியும்; அதே போழ்து உலகியல் தெளிவு நிலையில் நமக்குச் சுன்ன மதிப்பெண்ணே கிடைக்கும் இக் கருத்தை இன் புணர்வால் உள்ளம் விளங்கும் உலகம் விளங்காதே’ (பா: 25) என, ஒளியெழுத்தில் அழகுறச் சுட்டுவார் ! நமக்கு வெப்பம் தேவைப்பட்ட இடத்து, நிழல் துன்பமானதாக இருக்கும்; நிழல் தேவைப்பட்டு விரும்பியனுகிய இடத்து, படுகின்ற வெப்பம் துன்பமானதாக இருக்கும். எனவே இன்ப துன்ப மென்பதெல்லாம், உயிர்க்குப் பொருந்திய அல்லது பொருந் தாத தற்சார்பு நிலைகளே என்பார் ! காதலெனும் போது !

  • காலமோ, நல்லிளமைக் காலம் ! நிலமோ, நெஞ்ச நறுநிலம் வித்தோ, எண்ண வித்து விதைப்போரோ, விழியர்கள் ! (உழவர்களில்லர் !) எருவோ, (இருவிழியர் களும் தம்முள் உரையாடி அளாவுகை) சொல்லெரு ! மழையோ, இருவரின் உயிரும் உள்ளமும் பொழியும் வேட்கை: வெப்பமோ ஊரார் தூற்றும் அலர். இவை முறையே அமைந்த நிலையில், இருவர் உள்ளத்தும், ஊன்றுகை பெற்ற எண்ண வித்தானது விளர்ந்து விளைந்து காதல் என்னும் முகையை அரும்பச் செய்கின்றது' இவ்வாறு இந்த அரிய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/30&oldid=758197" இலிருந்து மீள்விக்கப்பட்டது