பக்கம்:உலகியல் நூறு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxix உணர்வு விளர்வுப் போங்கை காதல் கிலே’ என்னும் தலைப்பின் கீழ் அருமையாக ஆசிரியர் அமைத்துள்ளார்! காதல் தோற்ற மானது, எங்ங்ண், எங்கு, எவர்யால், எப்படி நிகழ்வதாகும் என்பதற்கான முழு விளக்கம் காழ்த்த அரிய இனிய செறி வுள்ள இந்நூற்பா, இலக்கிய வுலகிற்கு ஒருபுடைப் புதுமை வடிவத் தோற்ற முடையதாகும் ! கடணென்ப காளையர்க்குக் காட்சி ! நமக்குற்ற நூல்கள் எவற்றினுள்ளும்,இவ்வளவு சாறமாக இக்கருத்து வெளிப்பட்டதே யில்லே திருக்குறளில்கூட, அரசர்க்கும் அமைச்சர்க்கும் சான்ருேர்க்கும் பிற பிறவே வலி யுறுத்தப் பெற்றன : கல்வியைக்கூட எப்பருவத்தினர்க்கும் உரியதாக்கிக் கூறும் பொதுச் சிறப்புக் கருத்தும் தொடர்ந்து வந்ததுதான் ! புறநானூறு போலும் மறம் பற்றிய நூல்களிலும் ' களிறெறிந்து பெயர்த்தல் காளேக்குக் கடனே ! . என்ற வாருண் போங்குகளிலேயே கடமை வலியுறுத்தப் பெற்றது ! இந்நூலில் அக்கடமைநிலை முறைப்படுத்தப் பட்டுள்ளது ! இளேஞர்களே ஒரு நாட்டின் ஆளுமைப் பாங்கில் அடுத்த படியில் அமர்தற்கும் நாட்டைச் செலுத்துதற்குமாகிய நெருக்கச் சூழலில் அமைந்த அகவையினராதலால், அவர்கள் முதற்கண் கட்டாயக் கடமையாக அறிவு தெளிதலே மேற் கொள்ள வேண்டும் என்று, நூலாசிரியர், ஆண்மையியல் தொடக்க வரியிலேயே உரக்க விரிக்கின்ருர் கடணென்ப காளேயர்க்குக் காட்சி என்னும் மணி மொழியில் பயிலப்பெறும் காட்சி என்னும் சொல், வெறும் கட்புலனே மட்டுமே குறியாமல், அறிவுத் தெரிவு என்னும் சிறப்புப் பொருளேயும் குறிப்பதாகும். கழக இலக்கியங்களில் இச்சொல் வழங்குமிடங்களே நோக்குமிடத்து, திருக்குறளி, லேயே இச்சொல்லுக்கு இம்மேற்கண்ட அறிவுத் தெரிவு'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/31&oldid=758198" இலிருந்து மீள்விக்கப்பட்டது