பக்கம்:உலகியல் நூறு.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxi கின்ருர்! அவ்விடத்தில், 'மன்' என்னும் உறுதிப்பாட்டுக்குரிய அசைச்சொல்லே ஈற்றசையாக நிறுத்தி யிருப்பது, தசம் எடுத்துக் கொண்ட கருத்தை நிறக்க நிறைவுறுத்த ஆசிரியர் கையாளும் உத்திச் சிறப்பைக் காட்டி நிற்கின்றது ! சொல்ல வந்த அருமைக் கருத்துக்கு அணிகூட்டி விடுகின்றது, மன்! மறம் அறம் திறம்! ( மறமறந்திறம்: ) மறநிலை என்னும் தலைப்பின்மீது ஒன்றின்கீழ் கொள்ளும் மனவூக்கமே மறம் என்றும், அம்மறத்தொடு அறிவுடைமை இயைந்திருக்கும் நிலேயே அறம் என்றும், அவ்விரண்டொடும் உடல்முயற்சி மேற்கொண்டு உழைத்தலே திறம் என்றும், தம்முடைய பாட்டில் புத்தொளி காட்டுகின்றர் புற வாழ்க்கைக்குரிய இம்மூன்றனலும் விளைவதுவே புகழ்' என ஒருவன் புகழ்பெறுதற்குரிய மூலத் தேவைகளே மிக அருமை யாகச் சுட்டி விடுகின்ருர் ! நாணமும் அடக்கமும் எட்டாம் இயலதான, பெண்மையியல், - நாணமும் அடக்கமும் அழகும் நலமும் அளவும் மேன்மேலும் அமைவுற வேட்கும் அறிவுடைய பெண்டிர்க்கென இருபான் வரிகளி லியன்ற மந்திர மொழியடங்கிய அரிய சாரப்பகுதி ! திருவள்ளுவப் பெருந்தகையின் கூற்றில் பயிலப் பெறும் * திருதுதல் நல்லவர் நாணு ' (குறள் : 1011) என்பது, எந்தப் பாங்கில் அமைந்திருந்தால் ஆண்மையைத் தன்வயப் படுத்தும் என்ற இலக்கண விளக்கத்தை, இப்பெண்மையியல் பகுதியின் நானநிலையின்கீழ், இந்நூலாசிரியர். முகங் கவிழ்க்கும் நாண் பெண்மை ஆண்மை முகக்கும் அகங் குமிழ்க்கும் இன்வாரி ஆழ்த்தும்' - என்ற இருவரிகட்குள்ளேயே வளைத்து, அகங்குமிழ இன்வாரியுள் நம்மை ஆழ்த்தி விடுகின்ருர் : இந் நாண நில விளக்கம் பெண்மைச் சிறப்பையே நிமிரச் செய்துவிடுகின்றது !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/33&oldid=758200" இலிருந்து மீள்விக்கப்பட்டது