பக்கம்:உலகியல் நூறு.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

хххіі நாணுகை என்பது நாண், நாணம், நாணு என்றவாறு மூ வடிவங்களிலும் கழகக்காலத்திலேயே பொதுப்படவழக்குப் பெற்றிருந்தது. இங்கு, பெண்மையியலில் முதற்பாடலின் தலைப்பை நானகிலேயென்றும், அறவியலில் மூன்ரும் பாடலின் தலைப்பை நாண்கிலே யென்றும் ஆசிரியர் அமைத்திருப்பது சிலர் அவற்றின் போன்மை நிலேயால் சிறிது மருட்சியேற்பட லாம்! இம்மருட்சி, கழகக் காலத்திலேயே அமைந்து குழப் புறுத்தியமையைத் தெளிவுபடுத்தவே திருவள்ளுவப் பெருந்தகை கருமத்தால் நாணுதல் நானுத் திருதுதல் நல்லவர் நாணுப் பிற (குறள் :1011) எனத் தம் குறட்கண் விளக்க நேர்ந்தார். அவ்விளக்கம் செய்துவிட்ட போதிலும் தொடரும் குழறுபடி நிலை மாற்றும் முயற்சியை, பெண்மைக் குரிய வெட்கப் பண்பினைக் குறித்தற்கு நாணம் ' என்ற அம்மீற்றுச் சொல்லேயும், தீயன செய்ய அஞ்சி வெட்கியுட்கும் பண்பைக் குறித்தற்கு நாண் ’ என்ற சொல்லேயும், மிக விளங்கப் பிரித்தமைத்துக் கையாளுவதன்வழி தெளிவு செய்து விடுகிருர் இந்நூலாசிரியர் : அடங்கல் இழுக்கன்றே!

  • பெண் தான் அடக்கமாக இருக்கும் ஒழுக்க நிலை யொன்றே ஆடவனே ஆள்வதற்குரிய சிறந்த வழியாகும். அரிமா போலும் எழுச்சியை யுடைய ஆண்மையுள்ளத்தில் கனன்றெழும் தீயையே பெண்ணின் இந்த அடக்கம் தனித்து விட வல்லது ' என, இவ்வடக்கநிலைப் பகுதியுள் ஆசிரிய நெஞ்சம் அடக்கமாக அடுக்கிச் செல்கின்றது ! அடங்கல் இழுக்கன்றே ஆளுள் ஒழுக்கு ' என்னும் முதல்வரி, துணுகிய திணுகிய சிறப்பு வரியாகும் !

இவ் வியலில், உடல்நல நிலையின்கீழ் விளங்கி யொளிரும் உடலம் உலகியலுக்கு ஒண் கருவி ' (பா :39:1) என்னும் ஒளிவரி, ' உடம்பார் அழியின் உயிரார் அழிவர் எனத் தொடங்கும் திருமந்திரப்பாடலினும் பொருட் சாரமும், திண்ணிய கருத்துத் தெளிவும், சொற்சுருக்கமும் நுண்மையும் உடையதாகும். . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/34&oldid=758201" இலிருந்து மீள்விக்கப்பட்டது