பக்கம்:உலகியல் நூறு.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiii அவ் வொண் கருவி கேடுறத் தொடங்குமானல், 'அன்பு கெடும் இன்பு கெடும் ஆன்ற அறிவு கெடும்' என்ற அடுக்கு அழகினும் அழகியதாகும் ! அன்புநிலை தாய் தன் சேயின்மேல் காட்டும் அன்பு, தந்தை தன் சேயின்மேல் காட்டும் அன்பு, சேய் தன் பெற்றேரின்மேல் காட்டும் அன்பு, இளந்தையராகிய காதலரிருவர் தம்முள் கொண்ட காதலன்பு என்ற இவை முறையே ஒன்றுக்கொன்று அடுத்தடுத்த படிநிலைப்பட்டனவே என்று வரையறை செய் யும் நூலாசிரியர்,-சான்ருேர்களின் அன்பு நிலப்பட்டது என்ருலுங்கூட, இம்மேற் சுட்டிய நானிலேகட்கும் அடுத்த ஐந் தாம் படிக் கட்டிலேயே அது வைக்கத் தக்கது என்றவாறு தானுணர்ந்த உண்மையை உறத்துச் சொல்லும் துணிந்த உயர் நெஞ்சழுத்தம்,-பிற பாப்புலவோர் இதுகாறும் பெருத தாகும் ! மற்றும், அன்பென்று உலகியலில் சொல்லிக் கொள்ளப்பெறும் பிற அனைத்தும், அன்னன்னவரும் அவ்வவ் வழிப் பயன் பெறுகின்ற அளவுக்குத்தக, ஒருவர்க்கொருவரால் பரிமாறிக் கொள்ளும் 'வாயன்பே என்று குத்திச் சொல்லும் அழகு, உலகியலில் அலேயிற் றுரும்பாகி வாழ்க்கை நடத்தி யுழலும் நமக்கு, நல்லதொரு தெளிவை நல்க வல்லதாகும் ! இந்நூலாசிரியர் அத்தகைய அன்புக்கு வாயன்பு ' என்ற புதுச் சொல்லாக்கத்தையே புணர்த்தியுள்ளார் ! - », ജ്ജിക്കു " தாமுறுவது உற்றம், தமையுறுவது ஒண்சுற்றம் ’’ (பா : 42 : 1) என வரும் வரியில், உற்றம் சுற்றம் என்பதற். குரிய மொழியியல் வழிப்பட்ட உண்மை அருமையாக விளக்கம் பெற்றுள்ளது ! * . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/35&oldid=758202" இலிருந்து மீள்விக்கப்பட்டது