பக்கம்:உலகியல் நூறு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxiv இனங்லை இனவுறவு நிலையானது, மொழி, நிலம், நாகரிகம், பண்பாடு, நாடு, ஆட்சி என்றவாறன ஆறு வழிகளால் உருவாவதாகும். ஒன்றில் குலேவு ஏற்படுமானல் வேருேர் உணர்வு தலையெடுத்து அதைக் கட்டுறுத்திக் காத்து நிற்கும். அச்சமயத்தில் மொழியுணர்வு ஓங்கித் தலையெடுக்குமானல், அவ்வினவுறவு நிலையைக் குலைக்கும் பிறவி, நிறம் போலும் பெருத்த வேறுபாடுகளும்கூட நில்லாது நீங்கிவிடும் என்ற தம் கருத்தில், நூலாசிரியர் தம் வாழ்க்கைக் குறிக்கோள்களில் தலையாயதான மொழியுணர்வுத் தொண்டில் தாம் தோய்ந் திருக்கின்ற வலிந்த பின்னணியின் உண்மை நிலையை ஒப்பு நோக்கச் செய்கின்ருர் ! மொழிநிலத் தலைப்பின்கீழ், தாமெழுதிய மொழியோடு இனநலமும் மொய்க்கு நலம் காணும், வழியாய்ந்து உணர்ந்து வரம்பமைக்க ; - தப்பின் அழிவே நிரல் நிறையாம் ' (பா : 14: 1-3) என்று பொதுப்பட ஓரினத்துக்கு விடுத்த எச்சரிக்கை வேண்டுகோளின் உட்புறத்துள்ளும் ஆசிரியர் ஒன்றி யிருப்பதை நாம் கவனத்திற் கொள்ள வேண்டும். படைப்பாளி, தம்மைத் தாமறியாமலே தம் படைப்பினுள் புகுந்திருக்கின்றமைக்கு, இம்மேற்குறிப்புகள் எடுத்துக்காட்டு களாகும். அறவிலக்கிய வெளிப்பாடாகையால், அதற்குரிய தமிழ்ப் பண்பாட்டோடு உலக ம்ாந்தர் அனைவர்க்கும் பொது வாகவே, அனைத்தும் புறம் போந்துள்ளன ! ஒட்பம் திட்பம் நுட்பம் செயலொன்று செப்பமுடையதாக அமைய வேண்டு மால்ை, செய்பவன் அதனை மனவொப்புதலோடும், அதற் குரிய அறிவோடும், அதைச் செய்வதற்குரிய ஊக்க வுணர் வோடும் அதிலேயே தம்மைத் தோய்த்துக் கொண்டவாருன ஈடுபாட்டோடும், உண்மை பற்றிய மனவுணர்வோடும் கூடி, செய்ய வேண்டும். அன்றேல், செய்பொருளோ அல்லது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/36&oldid=758203" இலிருந்து மீள்விக்கப்பட்டது