பக்கம்:உலகியல் நூறு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

XXXV செயலோ செப்பமுடையது எனச் சொல்ல வியலாது! அச் செயல் ஒட்பம், திட்பம் ஆகியன பெற்றிலங்க வேண்டு மாயின், அதைச் செய்வோன் அச்செயலுக்குரிய ஆராய்ந்த அறிவுத் திறப்பாடு உடையவகை இருத்தல் வேண்டும். ஆல்ை, அச்செய்கையின் நுட்பம் விளங்குவது, அத்திறப் பாட்டோடேயே ஓர் இயற்கையமைவு அவனுக்குக் கட்டாய மாக இருந்தால்தான் இயைவதாகும் இந்த இயற்கை யமைவு நெடிய மரபு இழை ஊடேயே அவன் பிறப்போடேயே பற்றி வருவதாகும். இவ்வுண்மை நிலைகளே செயனிலே வெண்பாவில் செறிய விளக்குகின்ருர் ! பொருட்குறை யாவும் புலக் குறைவே! ஒரு செயலின் முடிவுக்கு நுழைவாயிலே முயற்சி என்றும், அத்துறையில் தொடர்ந்து பெறும் பயிற்சியே ஒருவனுக்கு அத்துறை வெற்றிக்குப் படிநிலை என்றும், முயற்சிநிலையில் வலியுறுத்துவார் ! ஒரு பொருள் குறையாக இருக்கின்றது அதாவது செப்பமாக அமையா திருக்கின்றது என்பது பொருளின் குறையன்று, அது அதைச் செய்தவனின் அறிவுக் குறையே என்பார். அவ்வரிய கருத்தை பொருட் குறை யாவும் புலக்குறைவே '’ என நுண்மையாக யாப்பார் ! ஒரு வினையில் இழப்பு ஏற்படுவது, அவ்வினை பற்றிய அறிவுக் குறைவாலும், முயற்சியின் வழியதாகிய உழைப்பு இன்மையாலுமே என்ற தெளிவை ஒரு சிறிய தொடரியத்தில், * இழப்பு அறியாமை உழைப்பின்மை ' என்று முச்சொல் லமைவிலேயே பெய்து காட்டி எளிதாக விளக்குகிருர், நூலாசிரியர் ! -

  • பண்பு உளத்துச் செல்வம்” (பா: 60:1} பிற வளமும் செல்வமுமாகிய நிலைகள் எளிய முயற்சியாலே எளியர்க்கும் மலியக்கூடியன என்று ஒப்பிட்டுக்காட்டி பண்பின் சிறப்பை உயர்த்துவார் ! -
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/37&oldid=758204" இலிருந்து மீள்விக்கப்பட்டது