பக்கம்:உலகியல் நூறு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvi பொய்யாமை வாய்மை ( பா: 66 ), நன்மை நினேக் குணர்வே நன்றி (67) மனவுயர்ச்சி தாழவரல் மானம் (74) என்றவாறு வரும் பல கருத்துரைத் தொடரிய சுருக்கச் சொல்லியங்களில், சொல்லுக்கு உரிய பொருளே எளிமையாக விளக்கும் அழகு மிகமிகச் சுவைத்தற்பாலதாகும் ! தொண்டு நிலே கூற வந்த விடத்து, தொண்டுக்குரிய உள்ளச்சீர்மை வாய்ந்தவர்களே அதில் வயப்பட்டு உழைக்க வாருங்கள் என்னும் கருத்துப்பட வந்த 'உள்ள ச் சீர் வாய்ந் தவர் துணிவின் வயப்படுக ! என்னும் நூலாசிரியர் தம் வெளிப்பாட்டில் அதை வேண்டுகோள் போன்றும் அமைத் திருப்பது தகுதியுடையார் பிறரும் அதில் ஈடுபட்டுப் பொது நலம் விளேவிக்க வருதல் வேண்டும் என்ற தம் பேருணர்வின் அவாவினேக் காட்டி நிற்கின்றது ! பொருணிலை அணுவின் உட்கருவில் அமைந்து குமுறும் ஆற்றலின் அளவையே E=MC என்னும் சூழ்த்திர மந்திரமாக * அறிவியலரசர் ஐன்சுடீன் கண்டு காட்டி விண்டு விளக்கினர்! இதன்வழி, 1945 சூலை 16-ஆம் நாளிலிருந்து பொருளே ஆற்றலாகவும் ஆற்றலேப் பொருளாகவும் மாற்றி விடும் ஆற்றல் வலிவை மாந்த இனம் பெற்றுவிட்டது. - ஓர் அயிரி எடை ( rேam) நிலக்கரியை முழு ஆற்ற 份哥受五 மாற்றில்ை, அந்த ஆற்றலின் அளவு 25 கோடி அயிர மின்னலகு (25,000000 Kilo Walt) உடையதாயிருக்கும் ! அவ்வளவு ஆற்றல் செறிவை அடக்கியே அது பொருளாக இருக்கிறது ! - அணுவில் முப்பது வகை அடிப்படைத் துகள்கள் இருப் பது அறிவியலாய்வில் இதுவரை கண்டுபிடிக்கப் பெற்றுள் ளது. அவற்றுள் மிக முகமையானது மூன்று. இலக்குரான் (Electron), L113gsrät (Proton), solo GTrār (Neutron)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/38&oldid=758205" இலிருந்து மீள்விக்கப்பட்டது