பக்கம்:உலகியல் நூறு.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxvii என்பவை அவை. அணுவை உருவாக்கிய மூலத்துகள்கள் என்று கூட இவற்றைச் சொல்லிவிடலாம். அணுவின் உட் 35(56368 (Nucieus) (3,5iflforgoň LL(pārār (positive charge) புரத்துரான்களும், மின்னூட்ட மற்ற நட்டுரான்களும் அமைத் துள்ளன : அவ் வுட்கருவைச் சுற்றியே எதிர் மின்னூட்ட முள்ள (Negative charge) இலக்குரான்கள் என்னும் துகள்கள் கதிரவ வெங்கருவைக் கோள்கள் சுற்றுவன போலும் நீள் வட்டப் பாதையில் சுற்றி வருகின்றன. பொருளும் ஆற்றலும் ஒன்றே ! பொருளேச் சிதைக்கின் ஆற்றலாகும். ஆற்றல் திரளின் பொருளாகும் ஆற்றலும் பொருளும் ஒரே மூலத்தின் உடன் காலமான (தற்காலிக மான) நேர்வின் வெவ்வேறு நிலைகளே ! நேர்மின்னூட்டம் எதிர்மின்னூட்டம், மின்னூட்டமில்லாத துளேமை ஆகியன சான்ற ஆற்றல் நிலேகள் பொருண் மூலங்களாக நின்று, உட் கருவிலும் அதைச் சூழ்ந்துமாகப் பல்வேறு எண்ணிக்கை அளவிலே கலந்தவாறு வடிவங் கொண்டிருக்கும் நிலேயே பொருளாக உள்ளது. அவ்வாற்றல் தொக்க பொருண்மூலங் களின் தொகுப்பு, பல படிநிலைகளில் கலந்துள்ள இயைபு களேயே நாம் பொருள்களாகக் காண்கின்ருேம். அஃதாவது ஆற்றலும் மூலங்களும் அளவில் அறக்கலந்து மாற்றுருவங் கொண்டிருக்கும் தோற்றநிலையையே பொருள் ' என்கின் ருேம். இந்த அரிய அறிவியல் கூற்றையே தம் வெண்ணுற்பா வரிகளில், ஆற்றலொடு மூலம் அளவின் அறக்கலந்து மாற்றுருவங் கொள்ளல் பொருளென்ப - -(பா : 77 : 1-2). என, ஆற்றலும் மூலமும் கலந்ததுபோலக் கருத்தாற்றலும் பொருட்சொற்களும் அறக் கலந்த யாப்பு கொண்டு சுட்டு கின்ருர் ! -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/39&oldid=758206" இலிருந்து மீள்விக்கப்பட்டது