பக்கம்:உலகியல் நூறு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxviii ஆற்றல் நிலை

  • அற்றலும் ஆற்றல் அழியாது மற்ருென்ருய்

உற்ருலும் ஆங்கதுவாய் உள்ளுயிர்க்கும் -என்றவாறு ஆற்றல்நிலைத் தலைப்பின்கீழ் ஊற்ருேடும் அருவரிகள், ஆற்றல் lorogë Ĝsrulurl: sol- (Law of Conservation of Energy) உள்ளடக்கித் துலங்குவனவாகும். ஐம்புலவழியே அறியும் அறிவுநிலை, மேன்மேலும் பாகு படுத்தியும் கூறுபடுத்தியும் மீள மீள அறிவெடையில் தம்மை நிறுத்துப் பார்த்துத் தெளிவடைந்த பின் பகுத்தறிவாகி வளர்வதும், அதனின் பரந்த தெளிவின் வழி மேன்மேலும் படர்ந்து மெய்யறிவாகி விளர்தலும், ஆக, ஒன்று செறிவுறச் செறிவுற அடுத்தபடியான மேன்மை அறிவு புலர்ந்து செழிக் கும் என்ற உண்மையை ஒர்பியலில், மெய்யறிவு நிலையின்கீழ்,

  • அறிவு பகுத்தறிவு மெய்யறிவென் ருன்றே

செறிவின் இயங்கிச் சிறக்கும் " -(பா : 91 : 1-2) என, ஒளிபெறச் சுட்டுவார். ஒர்பியலே அடுத்த இறைமை யியலிலும், இறையுருவத்தைக் கற்பித்துக் கொண்டு உரு வாக்கிக் கொள்ளும் அறியாமை நிலைகளைச் சாடியவாறு தாமுணர்ந்தவற்றை நுண்ணிய பாக்களில் திறம்படக் கூறு காட்டியுள்ளார் ! உவமை (1-2) ஒன்றுகடல் புன்மணலிஞ்ஞாலம் (பா : 1-1)-(இவ் வுலகம் புடவியை நோக்க, கடலின் மிகச் சிறிய மணல் ஒன்றைப் போன்றதாகும்). (1-2) அடவியென மீன் செறிவாம் (பா : 1-2) -(அண்டங் களில் உள்ள விண்மீன்கள், இவ்வுலகத்தேயுள்ள காடுகள் போலும் செறிந்தனவாக உள்ளன ; அவ் வளவு நிரம்பிய எண்ணிக்கையுடையன என்றவாறு)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/40&oldid=758208" இலிருந்து மீள்விக்கப்பட்டது