பக்கம்:உலகியல் நூறு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xxxix {1-3) மலேயிற் கடுகுபோல் மண்ணுலகில் மாந்தன் (பா : 4-1} - (மலேயின் மேல் வைத்த ஒரு கடுகு எவ்வளவு சிறியதாயிருக்குமோ அந்த அளவுக்குரிய வேறுபாடு, இந்த மண்ணுலகத்திற்கும் மாந்தனுக் கும் இடைப்பட்ட உருவ அளவு வேறுபாடாகும்.) (1-4) வாழ்க்கை அலையில் துரும்பாகும் (பா : 4-8). (1.5) அங்காப்பும் துய்ப்பும் இலயில் பனித்துளியாம் - (பா : 4-4). (1-6) முத்தவிழ்ப்பாய் ......... வீழும் வியப்பே வியப்பு (பா : 82-2). |குழந்தையின் பிறப்புக்கு, சிப்பியினின்று அவிழ்ந்து விழும் முத்து உவமைப்படுத்தப் பெற்றுள்ளது !!. (1-7). கவண்முகத்து ஊடுருவும் கல் (பா : 85 : 4). (1-8) புனமொன்றில் புள்ளார்தல் ஒக்கும் (பா , 92 : 2-3). என்றவாறு அழகிய நுட்பமான உவமைகளின் செறிவு இத் நூலுள் எங்கும் விரவிக் கிடக்கின்றது. சொல்லாட்சிப் புதுமைகளும் அவற்றின் பொருள்களும் இலக்கியப் புலமையும், சொல் நுட்பம் அறிதிறனும், சொல்லாக்க ஆற்றலும் கைவரப் பெற்றவராக நூலாசிரியர் இயல்பின் இலங்குவதால், தம் கருத்தை வலியுறுத்தற் கேற்றவாருன புதிய கோணங்களில் சொல்லப் பெய்தலே யும், புணர்த்தியமைத்துக் கொள்ளுதலேயும் இந்நூற்கண் சிறக்க மேற்கொண்டுள்ளார். அவை பலுக்கற்கு எளிய வும் பொருண்மையில் வலியவுமாக செப்பமுறப் படித் துள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/41&oldid=758209" இலிருந்து மீள்விக்கப்பட்டது