பக்கம்:உலகியல் நூறு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xLii முடிவுரை இந்நூல் அளவில் மிகச் சிறியது ! நூலளவில் திருக் குறளே அளவிற் சிறியதாக இருக்கையில், அக்குறள் நூலே ஒப்பிடுகையில், அதில் ஆறில் ஒரு பகுதியதான தோராய அளவையே இந்நூல் பெற்றுள்ளது. அவ்வளவு அளவிற் சிறியது இது ! ஆனால், தமிழிலக்கிய உலகில் நிலைத்த சிறப்பொடு நின்று நீடுய்ந்து மாந்த இனத்தை உய்க்கும்படியான அரிய தினுக்கக் கூறுகளே இயல்பாகவே இது பெற்றுள்ளது. உலகியலேப் பரவலாகச் சுட்டியெழுந்த இத்தகைய ஒர் அற விலக்கியம் போன்று பிற வேறெம் மொழிகளிலும் வேருென்று தோன்றியுள்ளதாகத் தெரியவில்லை ! தமிழுக்கும் இதன் உள் ளடக்க அமைப்புமுறை புதியது ! உலக மாந்தர் அனேவர்க்கும் பொதுப் பயனுகப் படைத்த இனிய நூல் இது பொது நல வுணர்வும், தொண்டுள்ளமும், அருள் நெஞ்ச மும், மக்கட் பற்றும், அறத் தெளிவும், ஒழுங்கு வேண்டும் வேட்கையும், உலகியல் தெளிவும், பரந்த நூலறிவும் வாய்ந்த ஒரு நன்னெஞ்சமே, இத்தகைய நூல்களே யாக்க வல்லது 1 அக்கூறுகளின் திரட்சியாய் விளங்கும் பாவலரேறு அவர்கள் இவ்வரிய நூலே சிறக்க யாத்துள்ளார்கள் ! இம் முன் பக்கங்களில் குறித்த உரைப் பகுதிகள், இந் நூலேப்பற்றி முழுக்க முற்றத் தெளிந்த அத்துணைக் கூறுகளே யும், நிறக்கக் கூறிவிட்ட திறத்தினவும் நிறைவினவும் அல்ல ! சில இடங்களைத் தொட்டுக் காட்டியுள்ளன. சில இடங்களில் உள்ளிறங்கிப் பார்க்க முயன்றுள்ளன : அவ்வளவே ! நூலுள் நுழைவார் திறத்திற்கேற்ப, தம் ஒளியைத் துலக்கிக் காட்ட வல்லதாகிய அமைப்பில், சொல்லும் பொருளும் ஒள்ளிய யாப்பில் கட்டப் பெற்றுள்ளன உள்ளத் தில் அணிந்து கொள்ளவும், அறிவறையின் ஒளி விள்ளவும், இதோ உங்கள் முன்ல்ை உலக வாயில் திறந்துள்ளது ! உள் புகுந்து உவப்பூறுங்கள் - ~ - - அன்பு, ப. அருளி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/44&oldid=758212" இலிருந்து மீள்விக்கப்பட்டது