பக்கம்:உலகியல் நூறு.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை இது * கோவை - பெரியார் மாவட்டப் பெருஞ்சித்திரனுர் நூல் வெளியீட்டுக் குழு"வின் இரண்டாம் வெளியீடு. எவ்வளவு சிறந்த, உயர்ந்த கொள்கையாயினும் உல கியலுக்குப் ப்ொருந்த விளக்கப் பெறவில்லேயாயின் அக் கொள்கையால் மக்களுக்கும் பயனில்லே ; அவ்வறிஞனும் மதிக்கப் பெருன். இதனையே திருவள்ளுவரும், ' உலகத்தோ டொட்ட வொழுகல் பலகற்றுங் கல்லா ர றிவிலா தார் . என் பார். அறிஞர்களிற் சிலர் புறத் துறையில் (தொழில், தொண்டு) வெற்றி பெற்ருலும் அகத்துறையில் (குடும்பவியல்) தவறி விடுகின்றனர். குடும்பவியலில் நிறைவடைந்த பலர் வெளி வாழ்க்கையில் தோல்வியடைகின்றனர். ஏன் ? இந்நிலைகள் உலகியலறிவின் தேவையை உணர்த்துகின்றன. இவ்வுலகிய லுண்மையை உணராமையால்தான் இன்றைய நம் நாட்டின் பல அரசியல், அறிவியல், தொழிலியல் அறிஞர்களின் அறிவும் வீணே மக்கட்குப் பயன்படாமல் வறிதே கழிவதைக் கண்டும் கேட்டும் வருந்தி வருகிருேம். - பழையன கழிந்தும் புதியன புகுந்திருக்கும் இன்றைய உலகியல் நூறு வெண்பாக்கள்ால் இருபது இயல்களில் அவ் வைந்து பாடல்களாகப் பகுத்தும் பன்னூறு கருத்துகளே நமக்கு அளித்துள்ளார் பாவலரேறு அவர்கள். வாழ்வாங்கு வாழ்ந்து மக்களுக்குப் பயன்படவிழையும் அறிஞர்கள் கையில் தவருது இடம் பெற வேண்டிய இந்நூலே வெளியிடுவதில் பெரிதும் மகிழ்கிருேம். இதில் கூறுப் பெற்றுள்ள கருத்துகள் செப்பமும் நுட்பமும் ஒட்பமும் வாய்ந்தன. அறிஞர்கள் இந் நூலே ஓதி அக் கருத்தொளியில் உண்மை யுணர்ந்து தமிழர்க்கு உரைத்து அவர்களே உயர்த்துவதுடன் தாமும் உயர்வார் dosest go 35. - - - இவண் கோவை - பெரியார் மாவட்டப் பெருஞ்சித்திரனுர் நூல் வெளியீட்டுக் குழு.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/45&oldid=758213" இலிருந்து மீள்விக்கப்பட்டது