பக்கம்:உலகியல் நூறு.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

įv சொல்லப்பெறும் கருத்துகள் நுண்மையும் திண்மையும் வாய்ந்தனவாக இருந்தால், நடையும் சொற்களும் அவற்றுக் கேற்றபடியே அமைவது இயற்கையாகப் போய்விடும்; அதைத் தடுத்து நிறுத்த முயலுவோமானல், கருத்தில் செறி விருக்காது ; வெண்மை தோன்றி விடும். நல்லறிவு அரிதின் முயற்சியால் பெறவேண்டிய தொன்ருகலின், உண்மை நாட்டமுடைய அறிவினுர், திண்மை கருதி வெண்மை அறிவிற் புகார் ; நுண்மை அறிவே அவருயிர்க்கு உவப்புத் தருவதாகும். இனி, உலகியல் நூறு என்னும் இந்நூல், உயர்ந்த மறை வான உலகியல் செய்திகளே, ஒரளவு முற்றும் அடக்கிக் கூறு வதாகும். அகண்டாகாரமாகப் புடைவிரிந்து, எண்ணத்திற் கெட்டாமற் பரந்து கிடக்கும் இப்புடவியுள் (பிரபஞ்சத்துள்), மாந்தப் பிறப்பிடத்தின் துகள் இருப்பும், அவனின் துணுக் கிருப்பும், அத்துணுக்கின் ஆட்டமும் அடக்கமும், ஒக்கமும் ஒடுக்கமும் எத்தகையன என்பதைத் துல்லியமாக, மெய்ப் பொருள் நூல்கள் போல் விளக்கிக் காட்டுவது, இந்நூல். உலகின் இயல்புகள் இருபது தலைப்புகளாகப் பகுக்கப் பெற்று, ஒவ்வொரு தலைப்புக்கும் ஐந்தைந்து உட்பிரிவுகளாக, மொத்தம் நூறு பாடல்களில் உள்ளடங்கியது. இந்நூல். இதில் வரும் நூறு குறும் பிரிவுகளேயும் ஒருசேர ஒட்டுமொத்தமாகப் பார்ப்பவர்க்கு, இந்நூலின் பெறுமதி ஒருவாறு விளங்கும். இதனுள் வரும் அனைத்துச் செய்யுள்களிலும், உலகின் நுண்பொருள், பருப்பொருள் இயக்கங்கள் அனைத்தும் ஒரு வகையாக அடக்கிக் காட்டப் பெற்றுள்ளன. இதன் பெரும் பகுப்பு இயல்களாகவும், குறும் பிரிவு கிலைகளாகவும் பாகுபாடு செய்யப் பெற்றுள்ளன. நிலை என்பது இருப்பு நிலை , இயல் என்பது இயங்கு நிலை. எனவே உலக இருப்பும் இயக்கமும் இதில் காட்டப் பெற்றுள்ளன எனக் கொள்க. இந்நூலுள் வரும் உண்மைகள் எல்லாம், எல்லார்க்கும், எவ்வகையானும் எளிதே விளங்குவன அல்ல. ஆழ்ந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/5&oldid=758218" இலிருந்து மீள்விக்கப்பட்டது