பக்கம்:உலகியல் நூறு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 உலகியல் நூறு 2. உறழ்ச்சி நிலை பல்லாயிரங் கோடி கோள்கள் பரிதிமீன் எல்லாம் உறழ்ந்திங் கியைதலால்-கல்லாத கற்றே மெனலொருகாற் கல்லே மெனலொருகா லுற்றே மெனலொருகா லோர்ந்து. 2 பொழிப்பு : பலவாயிரங் கோடியளவிற் கோள்களும், அவற்றை இயக்கும் கதிரவன்களும், அவைபோலும் மீன் களும், தனித்தும் சேர்ந்தும் மாறுபட்டும் இவ்வுலக வுருண் டைக் கண் இயைபு கொண்டிருப்பதால், இங்குள்ள உண்மை களே முற்றுங் கல்லாத நிலேயில், கண்டறிந்து கற்றேம் என ஒரு பொழுதும் கல்லேம் என ஒரு பொழுதும், ஆராய்தல் நிலையில் உள்ளேம் என ஒரு பொழுதும், மாறு பட எண்ணிச் சொல்லும் நிலேயேற்படும். 3. அறிவு மருட்சி நிலே உருண்டை உலகம் உருள்விழிக்குத் தட்டாய் இருண்டொளிரும் தன்மைத் தியல்பின்-மருண்டறிவால் உண்மை இலவென்பார் இன்மை உளவென்பார் அண்மை தொலைவென்பார் ஆம் ! 3 பொழிப்பு : உருள்வதும் உருண்டையானதும் ஆகிய இவ்வுலகம், அதுபோல உருள்வதும் உருண்டையானதும் ஆகிய விழிகளுக்குக் காட்சியளவில் தட்டை போல் இருள் வதும் ஒளிர்வதும் ஆகிய தன்மையில் இயங்குவதால், அதில் உள்ள உயிர்களின் மருட்சி பொருந்திய அறிவிஞலே உண்மை நில்களே இல்லை என்றும், இன்மை நிலைகளே உண்டு என்றும்; அண்மையைச் சேய்மை யென்றும், சேய்மையை அண்மை யென்றும், மயக்கமுறச் சொல்லுவர்.ஆம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/52&oldid=758221" இலிருந்து மீள்விக்கப்பட்டது