பக்கம்:உலகியல் நூறு.pdf/53

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் 3 4. துய்ப்பு நிலை மலையிற் கடுகுபோல் மண்ணுலகில் மாந்தன் ! நிலையிற் பெரிதாகும் நீள்நினைவு வாழ்க்கை அலையிற் றுரும்பாகும் ! அங்காப்பும் துய்ப்பும் இலையிற் பணித்துளியாம் இங்கு ! பொழிப்பு : மலேயளவு போலும் உள்ள இம் மண்ணுல கில் மாந்தன் நிலே கடுகளவு போல்வதாம். அவன்றன் உணர்வு நிலைகள் யாவற்றினும் பெரிது அவனின் நீண் டுயர்ந்த நினைவேயாகும். அவனின் வாழ்க்கையோ திரைத்து எழுந்து துரைத்து வீழ்கின்ற அலேயின்கண் சிக்கிய துரும்பு போலும் அலேவு சான்றதாம். மற்று, அவனின் ஆசை அவாவுதல்களும், அவற்ருல் முடிந்த நுகர்ச்சி நிலேகளும், இலையின்மேல் உள்ள பனித்துளி போல் கவர்ச்சியும் சிறு நேர நிலைப்பும் கொண்டதாகும், இவ்விடத்து ! 5. அழிவு நிலை கின்றுகிலை கில்லாது நீண்ட நெடுவானில் தொன்றுமுதல் ஈர்சுற்றுத் தொல்லுலகம்-அன்ருெருகால் தாயொளியும் ஒல்கத் தணந்து நிலைமாறிப் போயழியும் கங்குற் பொடிந்து. பொழிப்பு : காட்சியளவான் நின்றது போலும் இருந்து கருத்தளவான் ஒரு நிலேயில் நில்லாமல், விழிக்கும் மொழிக்கும் எட்டாத நெடிய வானத்தில், தோன்றியது முதல் இரண்டு வகைச் சுற்று இயக்கங்களேக் கொண்டதாகிய இத்தொன்மை யான உலகம், என்றே ஒரு காலத்தில் தனக்கு ஒளி நல்கும் தாயாகிய கதிரவனின், ஒளி குறைந்து குளிரடைதலால், தன் நிலையில் திரிபுற்று, அதனின்று விலகியோடி இருட் பகுதிக்குள் புகுந்து பொடிந்து அழிவதாகும். . . . . . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/53&oldid=758222" இலிருந்து மீள்விக்கப்பட்டது