பக்கம்:உலகியல் நூறு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 நாட்டியல் | 1. ஆட்சி திலே தனிமை குடியரசு தன்னுண்மை ஆயம் எனினுங் குடிகட் கிடரியல்பாம் ; வாய்மை இனிமை நடுநோக் கெதிரறிதல் கல்வி முனிமற லற்ற முகத்து ! பொழிப்பு : தனியாசு, குடியரசு, வல்லதிகார ஆட்சி, அறிவர் குழு ஆளுகை எனும் நால்வகை ஆட்சியெனினும், குடிமக்கட்குத் துன்பம் இயல்பேயாகும்; அவ்வாட்சிக்கு வாய்மை, இன்னுரை, நடுநோக்கு, வருவதறியும் முன் னுணர்வு, கல்விச் சிறப்பு, தீமை, பகை இரண்டையும் முனிந்து காக்கும் தறுகண்மை ஆகியவை அற்றுப் போகின்ற 2. சட்ட நிலே அமைத்த வதிகாரத் தாள்வோர்க்குச் சார்பாய், சமைத்துக் கொளும்நெறியே சட்டம்-இமைத்துரைப்பின் ஆனக் குழுசெய் யறநெறியாங் கோரேழைப் பூனக் குதவுமெனல் பொய். 7 பொழிப்பு: எவ்வழியேனும் தம் வலிமையான் அமைத் துக் கொண்ட அதிகாரத்தினலே ஆளவந்தவர்கள் என்றென் றும் தங்களுக்குச் சார்ந்து வருவதாக முன்னறிவுடன் உரு வாக்கிக் கொள்ளும் வழியமைப்பே சட்டம் எனப்படுவதாகும். விளங்கச் சொல்வதாயின், யானேகளே சேர்ந்த குழுவொன்று செய்யும் அறமெனப் பெயர்பெறும் சட்ட நெறிமுறைகள், ஆங்கு ஓர் ஏழைப் பூனைக்கு உதவிவிடும் என்பது பொருளற்ற உரையேயாகும். . . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/54&oldid=758223" இலிருந்து மீள்விக்கப்பட்டது