பக்கம்:உலகியல் நூறு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 5 5. அரணிலை சேய்க்குத்தாய் கன்னிதந்தை சேயிழைக்கு வன்கணவன் வாய்க்குமகன் ஈன்ருேர்க்கு வன்காவல்-தேய்க்கரிய ஐந்தின் வளத்தெனினும் ஆற்றலிழந் தார்க்கென்னும் ஐந்தினுங் கொள்ளா வரண். 8 பொழிப்பு : குழந்தைக்கு அதன் தாயும், கன்னிப்பெண் ணுக்கு அவள் தந்தையும், சிவந்த நகையணிந்த மனங் கொண்ட ஒருத்திக்கு வலிமை மிக்க அவள் கணவனும், பெற் ருேர்க்கு வாய்த்த மகனும் வன்மை மிக்க காவலாம். அழித் தற்கு அரிய ஐந்தினே வளஞ்சான்ற ஒரு நாட்டினே ஆள்பவர் எனினும், தன்னுற்றலே இழந்தவர்க்கு, ஐம்பூத வழியினும் கொள்ளமுடியாத அரணிருந்தும், என்ன பயனேத் தரும் ? 4. ஒறுப் பு நிலை நயன்செய்து நாட்டங்திசை திருப்பி கன்ருற்றின் வயன்செய்து நோக்கம் வரைக-பயனின்றே சொல்கழிபூண் கோட்டமுயிர் சோரத் தடிதலென்னும் வெல்வழியொன் றில்லா வினை. 9 பொழிப்பு : மக்களுக்கு நயன்மை (நீதி) செய்து, அதன் வழி அவர்களுடைய புன்மை நாட்டங்களே வேறு திசைக்கண் திருப்பி நல்வழியில் அவற்றை வயப்படுத்தி, ஆள்வோர் தம் நோக்கத்தை நிறைவேற்றுக, மற்று, எச்சரித்துக் கடிந்து சொல்லுதல், கழி கொண்டு அடித்தல், பூட்டிட்ட சிறையில் தள்ளுதல், உயிர்போகும்படி தண்டித்தல் என்னும், குற்றம் செய்வோரை அதனின்று மீட்டு வெல்கின்ற வழியொன்று இல்லாத வினேகளால் பயனில்லேயாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/55&oldid=758224" இலிருந்து மீள்விக்கப்பட்டது