பக்கம்:உலகியல் நூறு.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாந்தவியல் ! 1. இயனரிலே ஒன்றுகிலம் நீரிரண்டு மூன்றுயிர்கள் நான்கியக்கம் கின்றியலும் ஐந்துணர்வோ டாறுமணம் ஏழுநிலை என்றுமுயிர்க் கெட்டுவினை தொண்டுகுறை பத்துகலம் குன்றல் மிகுதல் குறை. 41 பொழிப்பு : மாந்த வாழ்வியலுக்கு இடகுகிய இவ்வுல கத்து நிேலப்பகுதி ஒரு பங்கும் நீர்ப்பகுதி இரண்டு பங்குமாக வும்; அவ்வுலகத்து வாழும் உயிர்கள், நீரிலும் நிலத்திலும் வானிலும் இயங்கும் முத்திறத்தினவாகவும்; அவற்றுக்கு இயக்கம் உடலும் உயிரும் அறிவும் மனமும் ஆகிய நான்காக வும் ; அவ்வியக்கத்திற்கு நிலனுகிய பொறிகள் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐந்தாகவும், அவை பற்றுகின்ற மன வுணர்வு காமம், வெகுளி, மயக்கம், செருக்கு, பற்று, பொருமை என ஆருகவும் ; அவை இயங்கும் உயிர்களின் பரும வெளிப்பாட்டு நிலை மனம், பொருள், காலம், இடம், நீளம், அகலம், உயரம் என ஏழாகவும்; அவற்றின் வினே உயிர்த்தல், உண்ணல், உடுத்தல், கானல், கேட்டல், சொல்லல், செய்தல், உறங்கல் என எட்டாகவும்; அவ்வுயிர் கள் எல்லாவற்றுள்ளும் சிறந்தனவாகிய மாந்தவுயிர்களுக்கு ஏற்படும் குறைகள் உறுப்பு, அறிவு, கல்வி, பொருள் நலம், துணை, மகவு, மனம், உறவு என ஒன்பதாகவும்; அவற்றுக்கு உண்டாகிய நலன்கள் பிறவி, உடல், அறிவு, மனம், கல்வி, செல்வம், துணை, மக்கள், தொழில், புகழ் ஆகிய பத்து ஆகவும் இயல்கின்றன. இவற்றுள் குறைவது மிகுதலும், மிகுவது குறைதலும் குறை எனப்படுமாம். , - . . .

  • பத்தில் மூன்று பங்கு நிலமும் ஏழு பங்கு நீரும் ஆகியதைத் தோராயமாக ஒன்றும் இரண்டும் எனக் குறிக்கப்பெற்றது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/57&oldid=758226" இலிருந்து மீள்விக்கப்பட்டது