பக்கம்:உலகியல் நூறு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

§ உலகியல் நூறு 2. குடிகை நிலே அடிமை மடிமை அறியாமை குற்றம் மிடிமை களவுகொலை மீளல்-குடிமை உரிமை உழைப்பூக்கம் ஒண்கல்வி தண்ட விரிமை உழவுசெயல் வேந்து. 13 பொழிப்பு : மொழியானும் இனத்தானும், அரசானும் வந்து சேரும் அடிமை நிலையும், அதனே அகற்ற விரும்பாத மடிமை நிலேயும், அதற்கடிப்படையாய அறியாமை நிலையும், அவற்ருல் விளேந்து வளர்கின்ற குற்றங்களும், அவை ஊன்றிய துன்ப நிலையும், அது தூண்டிய களவு நிலையும், அது வாயா விடத்து நேரும் கொலே நிலையும் என இவற்றினின்று மீண்டு கொள்வதே ஓரினத்தின் குடிமைச் சிறப்பாகும். அச்சிறப்புப் பொருந்திய குடிகளுக்கு அவை வேண்டிய உரிமை வழங்கு தலும், அவ்வுரிமை பெற்றவிடத்து அது தொடர்ந்து உழைப்பை உருவாக்குதலும், அதனே ஊக்கப்படுத்தலும், அவை தேயாத ஒள்ளிய கல்வியைத் தருதலும், அவற்றுப் பிழை சேருமிடத்துத் தண்டமிட்டுத் தடுத்தலும், உயிர் நிலப்புக்கு அடிப்படையாகிய உழவுத் தொழிலே விரிவு செய் தலும், அக்குடிமைக்காகிய அரசின் சிறப்பு நிலையாகும். 3. கலப்பு நிலை மனக்கலப்பு வாய்க்கிலிரு மாண்குடிக்குள் நேரும் இனக்கலப்பு குற்றமன்ரு மென்றும்-புனற்கலப்பு ரோன் பெருமையுறும் நீர்மையறுங் காற்றத்தம் பேரான் இயங்கலே பீடு. . . . . 13 பொழிப்பு : மன வொருமைப்பாட்டோடு கலத்தற்கு ஏது வாய்க்குமானல் மாண்புமிக்க இரண்டு குடிகள் தமக்குள் சேர்ந்து கொள்கின்ற இனக் கலப்பு குற்றமாகாது; என்றைக் கும் நீரின் தன்மையால் இருவகைப் புனற் கலப்பு பெருமை பெற்று விளங்கும்; தம் நீர்மைத்திறம் அற்றுப் போகுமானல், தம்தம் இயல்பான பெயர்ச் சிறப்பால் அவை தனித்து இயங்கு வதே பெருமை தருவதாகும். . -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/58&oldid=758227" இலிருந்து மீள்விக்கப்பட்டது