பக்கம்:உலகியல் நூறு.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 4. மொழி நிலை மொழியோ டிணகிலமும் மொய்க்குகலங் காணும் வழியாய்ங் துணர்ந்து வரம்பமைக்க, தப்பின் அழிவே நிரல்கிறையாம் : அன்றறிவார் மொய்ம்பிற் பழியாம் ; பிறன்கடைக்கும் பாழ். பொழிப்பு : மொழியும், இனமும், நிலமும் மேன்மேலும் சிறந்து நலங்காணுகின்ற வழியினே ஆய்ந்து ஓரினம் வரம்பு அமைத்துக் கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு செய்யத் தவறுமானல் அவற்றிற்கு முறையாக அழிவு வந்து சேர்வ தாகும். அக்கால் அவ்வினத்து முன்னேய அறிவுடையாரின் புகழுக்கும் பழி வந்துறும்; அவ்வினத்தின் கால்வழியினரும் பாழாய்ப் போவர். 5. ஒழுக்க நிலே ஒழுக்கம் பசியின்மை ஊன்றுதொழில் கல்வி இழுக்கம் இவையிறப்ப எய்தும்-வழுக்கலிலா உள்ளத் தொழுக்கம் உயரொழுக்கம் ஆங்கதுவும் கள்ளத் திடறுமக் கால்! - - 14 பொழிப்பு : ஒழுக்கம் என்னும் உயர்ந்த கடைப்பிடி பசி யின்மையாலும், ஊன்றிய தொழில் வாய்ப்பிலுைம், உள்ளம் விளக்கும் கல்வியிஞலும் வந்தெய்துவதாம் ! இம் மூன்றும் இல்லாதபொழுது இழுக்கம் வந்து குடிகளைச் சூழும். இந் நிலைக்குப் புறம்பாய் என்றும் வழுக்கலிலாத உள்ளத்தே அமைந்த ஒழுக்கமே உயர்வான ஒழுக்கம்; ஆலுைம், அது வும் அம் முந்நிலைப் பிறழ்ச்சிக்கண் ஒருவரும் அறியாதவாறு கள்ளத் தன்மையான் இடறுதலும் செய்யும் ! ‘. . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/59&oldid=758228" இலிருந்து மீள்விக்கப்பட்டது