பக்கம்:உலகியல் நூறு.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

V தோய்ந்த சிந்தனேயால் வெளிப்படுத்தப் பெற்ற மெய்ம்மக் கூறுகள் இவை. இந்நூல் முழுமையையும் கற்றுணர்ந்தார், உலகின் மூல நிலைகளைத் தெளிவாக உணர்ந்து கொண்டவ ராவர். அத்தகையவர் இவ்வுலகின் புறவியக்கங்களால் அசை வுரு மனத்திண்மை பெறுவர் ; அலேவுரு அறிவு நிலேப்பை அடைவர். அவர்க்கு இவ்வுலகின்கண் நேர்ந்த, நேர்கின்ற, நேரவிருக்கின்ற அனேத்துப் புறச் செயல்களும், அவற்றின் நோக்கங்களும், ஆக்கங்களும் எளிதே விளங்குவன வாகும். எனவே, அவர்க்குத் துன்பம் என்பதில்லே ; துயர் மூட்டங்கள் அவர்தம் மனத்தின்கண் எழா ! மாசு மயக்கங்கள் அவர்தம் உள்ளத்தைப் பற்றி அலேக்கழிப்ப தில்லே ; இழிவு இருள் நிலே அவர்தம் அறிவைச் சூழ்ந்து வருத்துவதில்லே. தூய ஒளி பொருந்திய சுடர்வெளிக்குள் அடங்கிய ஓர் உள்ளொளியாக அவர் இருப்பர். பேரின்ப வெள்ளத்துள் அவர்களின் உயி ரியக்கம் ஆழ்ந்து, பெயரா வியற்கைப் பெரு நிறைவை அவர் களுக்கு வழங்குவது உண்மை இதனே ஆழ்ந்து கற்குங்கால், இவ்வுண்மையை அவர்கள் தெளிந்து தேர்ந்துகொள்வார்கள். இதிலுள்ள பாடல்கள், சொற்புணர்ப்பால், படிப்பதற்குச் சிறு அளவில் எளிமைக் குறைவாக இருந்தாலும், ஓரிருமுறை வாய்விட்டுப் படித்து விட்டால், மனத்தில் எளிதே பதியும் தன்மை வாய்ந்தவை ; சொல்லுரஞ் சான்றவை ; பொருள் பொதிவு நிறைந்தவை ; நூற்பா வகையில் இணேந்து உணர் வின்பம் கிளர்ப்பவை ; வெண்பா யாப்பிற்குரிய அழகிய செப்பலோசை இயைந்தவை. இந்நூலிலுள்ள பாடற் கருத்துகள் பலருக்கு வியப்பை அளிக்கும் ; சிலர்க்கு மலேப்பைக் கொடுக்கும் ; சிலர்க்குச் சில கருத்துக்கள் கற்பனேயாகப் படும் ; சிலர் சிலவற்றை ஒப்புக்கொள்ளவும் தயங்குவர் ; சிலர் சில கருத்துகளேச் சரியோ தவருே என்று ஏற்கவும் இழக்கவும் மனமிலாது மயங்குவர்; சில கருத்துகளால் சிலர் எரிச்சலும் வெகுளியும் கொள்ளலாம் ; சிலர் பொய்ம்மை என்றும் புகலலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/6&oldid=758229" இலிருந்து மீள்விக்கப்பட்டது