பக்கம்:உலகியல் நூறு.pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4. பொதுமையியல் 1. உழைப்பு நிலை உழைப்பொருபால் ஓங்கும் உவப்பொருபால் ஒன்னர் இழைப்பொருபால் ஏய்தல் இகழாம்-தழைப்பெய்தல் வேண்டின் உடலுழைப்பு வேளாண்மை துய்ப்பிவற்றை யாண்டும் பொதுவமைத்தல் யாப்பு : ...... f 6 பொழிப்பு : உடலுழைப்பு வாழ்க்கையின் வருத்தம் ஒரு சிலர் இடத்தும், படிப்படியாக உயர்ந்து விளங்குகின்ற வாழ்க்கை நலன்களின் மகிழ்ச்சி ஒரு சிலரிடத்தும், நாட் டமைப்புக்குப் பொருந்தாத மனக்கிளர்ச்சி யுடையவர்களின் இடையூருன செயல்கள் ஒரு சிலரிடத்துமாக அமைந்திருத்தல் நாட்டுக்கு இழுக்காம். நாடு செழிப்புற வேண்டின் மக்களுக் குப் பொதுவாய உடலுழைப்பு, உயிர் வாழ்க்கைக்கு இன்றி யமையாத உழவு, இவ்வுலக நலன்களின் நுகர்ச்சி ஆகிய மூன்றினையும் எங்கும் எல்லார்க்கும் பொதுமை என்று அமைத்து விடுதலே பொருந்துவதாகும். 2. பொருள் நிலே உடல்கருவி மூளையெனும் ஒண்பொருள்கள் மூன்றில் அடலுழைப்பா லாக்குவதே ஆக்கம்-கடல்கிலத்தின் உள்ளும் புறமும் ஒளிர்வதெல்லாம் மாந்தரினம் அள்ளும் படிநிலைக்கே ஆம் ! 17 பொழிப்பு: உடல், உருவாக்கப்பெற்ற கருவி, இவற் றுக்கு அடி நிலையாகிய அறிவு ஆகிய ஒளிப்பொருள்கள் மூன்றிலுைம் வருந்தியுழைத்து உருவாக்குவதே செல்வம். கடல், நிலம் இரண்டின் உள்ளேயும் மலர்ச்சியுற்றுக் கிடக் கும் செல்வமெல்லாம், மக்களினம் வாரி நுகர்ச்சி கொள்ளும் படி நிலைகளுக்கே என்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/60&oldid=758230" இலிருந்து மீள்விக்கப்பட்டது