பக்கம்:உலகியல் நூறு.pdf/61

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 11 நிலை or" 3. உறையுள் திருக்குவைசூழ் மாடத் தெருக்கடையின் ஓரத் துருக்குலையும் வாழ்க்கை ஒழிக-பெருக்கமுறும் வான்தோய் வளமனைக்குள் வன்குடில் வாழ் ஏழையர்தம் கான்தோயுங் காலம் வரும். 18 பொழிப்பு : அழகிய செல்வ வளம் சூழ்ந்திருக்கின்ற மாட மாளிகைகள் நிறைந்த தெருக்களில் ஒதுங்கிய ஓரங் களில் வாழ்ந்து உருக்குலேகின்ற துயர் வாழ்க்கை இவ்வுலகை விட்டு ஒழிவதாகுக ! நாளும் பெருகித் தோன்றும் வான ளாவிய வளமிக்க மனேகளுக்குள் மிகச் சிறிய குடிசைகளில் வாழ்கின்ற ஏழை மக்கள்தம் கால்கள் தோய்கின்ற காலம் வந்தே தீரும். 4. உடைமை நிலை உடல்நிலத்துக் குள்ளம் உயிர்க்குடைமை என்றும் கடல்கிலத்துச் செல்வம் கணக்காம் - கெடல்நலத்து நல்லறிவும் கல்லுழைப்பும் அல்லால் நலமில்லை புல்லறிவால் துன்பம் பொது. 19 பொழிப்பு : நிலத்துக்கு உடலும், உயிர்க்கு உள்ளமும் உடைமைப் பொருளாகும். ஆகையால் நிலத்தின் அள வாகவும் உயிர்கள் அளவாகவுமே அவற்றின் உடைமைப் பொருள்களாகிய உடலெடுத்த பிறவிகளும், உள்ள உணர்வு களும் தோன்றும். எனவே, கடலுள்ளும் நிலத்துள்ளும் உள்ள செல்வங்கள் ஆங்காங்குத் தோன்றுகின்ற உயிர் களுக்குக் கணக்கியல் முறைப்படி போதுமானவையாகவே இருக்கும். கேட்டிலும் நலத்திலும் நல்லறிவும் நல்லுழைப்பும் இணேந்து நின்ருல் ல்லது உயிர்களுக்கு நலம் உண்டாவ தில்லை. புன்மை மிக்க அறிவால் விளைகின்ற துன்பம் எல்லா ருக்குமே பொதுவாகி விடுகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/61&oldid=758231" இலிருந்து மீள்விக்கப்பட்டது