பக்கம்:உலகியல் நூறு.pdf/63

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 வாழ்வியல் 1. உழவு நிலை உழவுக் கிரண்டு தொழில்குடிக்கொவ் வொன்ருல் இழவுக் கிடமுலகில் இல்லை - முழவுக்குக் காத்துழுது மின்னுக்குக் காழிட்டால் தாமுண்டு மீத்தயலுக் கீயலாம் மேல் ! 21 பொழிப்பு : உலகில் நீரும் சேறும், துாருந் துவரும், பாழும் பாலும், காடும் கரம்பும் தவிர்த்த நன்னிலத்தில் உழவுக்கென இரண்டு கூறும் தொழிலுக்கும் குடியிருப்புக்குமென ஒவ்வொரு கூறும் கொண்டு பயன் கண்டால், உலகில் துயரத்திற்கு இட மில்லையாகும். இடிமிகுந்த காலத்திற்குக் காத்திருந்து உழுது, மின்னும் பருவத்தில் விதைத்தால், உழைப்பவர் தாமும் வயிருர உண்டு, மற்றவர்க்கும் ஈயும்படி விளைவு மிகுந்து நிற்கும். - குறிப்பு : இடிமிகுந்த காலம் - பின் முதுவேனில். மின்னும் பருவம் - பின் முதுவேனிலுக்கும் முன் காருக்கும் உள்ள இடைப் பருவம். கோடையில் உழவேண்டும் என்றது உழுத மண் நன் ருகக் காய்தல் வேண்டும் எனற்காம் அறிக. பால் : பாறைக் கல் நிறைந்த நிலம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/63&oldid=758233" இலிருந்து மீள்விக்கப்பட்டது