பக்கம்:உலகியல் நூறு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$4 உலகியல் நூறு 2. தொழில் நிலே செய்தொழில் இன்றிச் சிறப்பில்லை ; தேவையோ டெய்தொழில் காலம் இடனறிந்து - மெய்வளையக் கைகருவி போற்றிக் கணக்கறிந்தால் பூதங்கள் ஐகருவிக் குள்ளாடும் ஆம் ! 22 பொழில் : தாமே செய்கின்ற தொழில் முறைகளின்றிப் பிற வேறு தொழில் முறைகளால் சிறப்பு எய்துவதில்லை ; நம் தேவைகளையும் நாம் எய்த வேண்டிய தொழிலேயும், அது செய்யப் பெற வேண்டிய காலத்தையும் இடத்தையும் அறிந்து உடல் உழைப்பு மிகும்படி, கைகளாலும், கருவிகளாலும் ஊக்கமொடு செய்கின்ற தொழிலின் விளேவுகளேயும் இழப்பு களேயும் கணக்கிட்டுச் செய்தால், ஐம்பூத வியக்கங்களும் நம் ஐம்பொறிகளின் ஆற்றலுக்குள் அடங்கும் என்க. 3. புன் மை நிலை இன்மையே புன்மைக் கிடங்கொடுக்கும் மற்றதனை வன்மையாற் கல்லல் வழுவிளக்கும் - மென்மையாய் உள்ளம் உழுதுணர்வு வித்தி உழைப்பறுத்தால் கள்ளம் கிளைமடிக்கும் காண் ! 23 பொழிப்பு : தம் துய்ப்புக்கு இல்லாத வெறுமை நிலை களே ஒருவற்கு மனத்தானும் அறிவானும் வினேயானும் தாழ்ந்த புல்லிய நிலைகளுக்கு இடந்தருவன ஆகும். அவ்வாறு நேர்வனவற்றை வேறு வலிய புற முயற்சிகளால் தடுத்து நிறுத்துதலோ அகற்றுதலோ குற்றங்களே விளைவித்து விடும். அந்நிலைகளுக்குட்பட்ட ஒருவரை அன்பும் பரிவும் ஆகிய மென்மை உணர்வுகளால் நெருங்கி, ஈடுபாட்டான் அவரின் உள்ளத்தைப் பதப்படுத்தி, அறிவை ஊன்றி, அவரின் வெறுமை நிலைக்கான அடிமை, மிடிமை, அறியாமை முதலிய வற்றைப் போக்கி, அவருடற்கு உழைப்புத் தந்து, பயன் பெறுமாறு செய்வது, கள்ளம் முதலிய குற்றங்களேத் தன் கிளேகளுடன் மடியச் செய்து விடுமென்றும் கண்டுகொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/64&oldid=758234" இலிருந்து மீள்விக்கப்பட்டது