பக்கம்:உலகியல் நூறு.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரனர் 15 4. துன் நிலை துன்பமெனும் ஆசிரியன் துன்னப் பயிற்றுவிக்கும் இன்பமெனுங் கல்விக் கிறப்பில்லை - இன்புணர்வால் உள்ளம் விளங்கும் உலகம் விளங்காதே வெள்ளத்துப் பின்பார் விளைவு ! 24. பொழிப்பு : துன்பம் என்னும் இயற்கை ஆசிரியன் நெருக்கமுறப் பயிற்றுவிக்கின்ற இன்பம் என்னும் கல்வி யறிவுக்கு என்றும் அழிதல் இல்லை. ஒருவர்க்கு வந்து சேரும் இன்ப நிலைகளால் உள்ளத்தின் அன்பு, இரக்கம் முதலிய உணர்வு வெளிப்பாட்டு நிஇலகள் மட்டுமே விளங்குவதாகும். மக்களமைப்பு வாழ்வியல் முறைகள், உலகப் பெருக்கம் முதலிய உலக நிலைகள் விளங்காமற் போகும். ஆற்று நீர் வெள்ளமாய்ப் பெருக்கெடுத்து இடர் தந்து, பின் வடிந்த நிலே யில், அண்டை அயலில் படிந்து விளங்கும் வண்டலால் உறுகின்ற பயிர் விளேச்சலேக் கண்டு உண்மை தெளிக. 5. இன் ய நிலை அழலின்ப மென்னின் கிழற்றுன்பம் ஆங்கே நிழலின்ப மென்னின் வெயிலாம் - குழலின்பங் கற்செவிடு தானறிமோ காட்சி குருடறிமோ தற்சார்யாம் இன்பம் தனக்கு ! - 25 பொழிப்பு : வெப்பம் இன்பத்தைத் தரும். சில நிலே களில் நிழல் துன்பத்தையே தரும். அவ்வாறே நிழலால் இன்புறும் சில நிலைகளில் வெயிலால் துன்பமே விளையும். நுகர்வு நிலை சிறிது தானுமன்றிக் கல்போலும் பிறவிச் செவிடு, குழலின் இன்பத்தை அறிய முடியுமோ ? அது போலும் பிறவிக் குருடுதான் காட்சி இன்பத்தை உணர வியலுமோ? இயலாவாம் ! எனவே, இவ்வுலக வுயிர் ஒவ்வொன்றுக்கும், இன்பம் என்பது அஃததற்குப் பொருந்திய தற்சார்பு நிலை களே என்று அறிக. * ... :

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/65&oldid=758235" இலிருந்து மீள்விக்கப்பட்டது