பக்கம்:உலகியல் நூறு.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 குடும்பவியல் § 1. காதல் நிலை கல்லிளமைக் காலத்தே நெஞ்ச கறுநிலத்தின் 条 வில்லெழுந்த அம்புவிழி வித்தூன்றச் சொல்லெருவில் வேட்கை மழையா விய்னம்பல் வெய்கதிராப் பூட்கையுறுங் காதலெனும் போது ! 26 பொழிப்பு : நல்ல இளமைக் காலத்தில், நெஞ்சம் என்னும் நன்னிலத்தின்கண், வில்லினின்று விசைந்தெழுந்த அம்புபோலும் கூரிய விழி எண்ணம் என்னும் விதையை ஊன்றவும் பின் நெருங்கிய காதலர் தாம் உரையாடும் சொற்களே அதற்கு எருவாகவும், உயிராலும், மனத்தாலும், உடலாலும் அவாவுகின்ற வேட்கையே மழையாகவும், அவர் தம் களவு நிலையைப் புறம் பழிக்கும் ஊராரின் பரந்துபட்ட துன்ற்றுதலே வெயிலாகவும் நின்று உதவ, அவ்விதை முளேத்து வளர்ந்து அரும்பிக் காதல் என்னும் முகையைத் தோற்றுவிக்க அது தானும் மலர்ந்து வலிமை பெறும். வலிமை பெறும் என்றது, மலர்ந்தபின் காய்த்துக் கனியும் என்பதால், 2. கணவன் நிலை கொம்பாய் கொழுவாய் குடையாய் குடும்பமெனும் இம்பருல காட்சிக்கோ ரேனியாய்ச் - செம்பாதி கொண்டுங் கொடுத்துங் குடிப்பெருக்கி ஆளுதலே மண்டுங் கணவனது மாண்பு பொழிப்பு : மனேயும் மக்களும் பற்றிப் படரும் ஒரு கொம்பாகவும், வாழ்வு எனும் நிலத்தில் விளேவு காண வேண்டி உழுகின்ற குடும்பம் எனும் கலப்பைக்குக் கொழு முனையாகவும், தம்மொடு சேர்ந்தாரை மழையெனும், செல்வ் மிகுதியினின்றும், வெயிலெனும் வறுமைக் காய்வினின்றும் கட்டிக் காக்கும் குடையாகவும், குடும்பமெனும் இம்மையுலக ஆட்சியின் உயர்வுக்கு ஒர் ஏணியாகவும், குடும்பத்தின் அனேத்து முயற்சிகளிலும் தாம் பாதியாகவும், தம் மனேவியும், மக்களும், பிறரும் பாதியாகவும் நின்று ஏற்று, வருகின்ற இன்பத்தினும் அவர்கட்குப் பகிர்ந்து கொடுத்து, தான் உற்ற குடி பெருகி நீளும்படி ஆண்டு நிற்பதுவே நிறைந்த கண்வ னுக்குரிய பெருமையாகும். so - - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/66&oldid=758236" இலிருந்து மீள்விக்கப்பட்டது