பக்கம்:உலகியல் நூறு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 17 3. மனேவி திலே பிறப்பிற் பொருந்தி பிழையாத அன்பால் மறப்பின்றி இன்பம் மடுத்துச் - சிறப்புறவே வாங்கி வகுத்து வழங்கி மகிழ்வித்துத் தாங்கல் மனையாள் தகை ! 28 பொழிப்பு : உயிர், உடல், உள்ளம், அறிவு, வினே ஆகிய ஐந்து பிறவி நிலைகளிலும் பொருத்தம் உடையவளாகி மனத்தானும், சொல்லானும், வினேயானும் பிழையாத அன்பு கொண்டு, அகப்புற வினேயழுத்தங்களால் பிறவாமல் நினேந்து தன் கனவற்கும் குழந்தைகட்கும் அவரவர்க்குரிய வகை களால் இன்பம் ஊட்டுவித்துச் சிறப்பு நிலேகள் பொருந்தும் படியாகவே எதனேயும் வாங்கியும் அதனேக் குடும்ப வுறுப்பி னர்க்கேற்ற வகையில் வகுத்துப் பகிர்ந்து வழங்கியும் மகிழ்வு செய்து, இவ்வினேச் சுமைகளால் தளர்வுருது பொறுமை பெற நிற்றல் மனேவிக்கு உற்ற சிறப்பாகும். 4. மக்கள் நிலை கொண்கன் கிற்ைவித்துக் கோதில் மனநிலத்துப் பண்குதலை யாய்விளைந்து பாலருக்தி - மண்கண் பூத்துப்புலர்ந்து பொலிந்து புலன் பெருகிக் காய்ந்துக் கணிதல் கடன் ! 29. பொழிப்பு : கொண்ட கணவனது நிறைந்த வித்தானது, குற்றமற்ற மனேவி என்னும் நிலத்து ஊன்றப்பெற, அது குழவி யாய் முளேத்து மழலைப்பண் பாடிக் குழந்தையாய் முகிழ்த்துத் தாய்ப்பால் அருந்தி வளர்ந்து, இந்நிலத்தின் கண் அறிவும் உணர்வும் பூத்து நல்விளைவாக மலர்ந்து, அழகுற்று விளங்கி, கரண கருவிப் புலன்கள் முதிர்வுற, உலக உயிர்களின் மலர்ச்சி. யின் பொருட்டாய்த் தானும் காய்த்துக் குலுங்கி, அவற்றின் பயனுக்குக் கனிந்து உதவி நிற்றல் மக்கட்கமைந்த கடமை யாம் என்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/67&oldid=758237" இலிருந்து மீள்விக்கப்பட்டது