பக்கம்:உலகியல் நூறு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T ஆண்மையியல் 靈 1. கடமை நிலை கடனென்ப காளையர்க்குக் காட்சி! கடனுக் குடனென்ப கல்லூக்கம் ! உற்ற - மடனென்ப தாளறவு! ஒன்றில் தகவின்மை எஞ்ஞான்றும் கோளறவு கூடாது மன் ! 31 பொழிப்பு : ஆடவர்க்கு, குறிப்பாக இளேஞர்க்கு, அறிவு பெறுதலே முதற் பெருங் கடமையாகும். அக்கடமைக்கு இயைபாக இருத்தல் நல்லனவற்றின்பால் கொண்ட உந் துணர்வாகும். அவர்களுக்கு வந்து பொருந்தும் அறியாமை எல்லாம் முயற்சியற்று இருத்தலும் ஒரு வினையிலும் தகுதி பெருதிருப்பதும் ஆகும். எந்நிலையிலும் தமக்குச் சரியென்று ஏற்றுக்கொண்ட கொள்கையைக் கைநெகிழ்ச்சிக்குந் தன்மை யும் கூடாதாம் ; அஃது இரங்கத்தக்கது. - 2. ஆளுமை நிலை ஆளுமை என்பகல் ஆண்மை! அதுதவிர்ந்தால் தாளுமை அன்றே தவிர்ந்தழிக்கும் - வாளமைந்த வல்லான் எனினும் வகையறிந்து சூழாக்கால் எல்லாம் இழுக்குத் தரும் ! - 32 பொழிப்பு : நல்ல ஆளுமை என்று சொல்லப் பெறு தலே ஆண்மையாகும். அது தவிர்க்கப் பெறுமானுல் அப் பொழுதே முயற்சி தவிர்ந்துபோய் தன்னே அழித்துவிடும். ஒள்ளிய அறிவு வாய்க்கப்பெற்ற வல்லவன் எனினும், ஒரு வினேயின்கண் தான் செலுத்தும் வகையை அறிந்துகொண்டு அதனே மேற்கொள்ளாவிடத்து, தான் மேற்கொண்ட எல்லா வினேகளும் தனக்கு இழுக்கையே தரும் என்று அறிந்து கொள்ளுதல் வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/69&oldid=758239" இலிருந்து மீள்விக்கப்பட்டது