பக்கம்:உலகியல் நூறு.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20 உலகியல் நூறு 3 மற நிலை மறமென்ப தொன்றின் மணவூக்கம் , மற்ருங் கறமென்ப அஃதோ டறிவுடைமை ஆன்ற திறமென்ப மெய்முயற்சி தேரினவை மூன்றும் புறமென்ப செய்யும் புகழ்! . - 33 பொழிப்பு : ஒருவர்க்கு ஒன்றின்மேற் கொண்ட மனத் தின் ஊக்கமே மறம் என்று சொல்லப் பெறுவதாகும். மற்று, அந்த ஊக்கம் அறிவுடைமையோடு இயங்குதலேயே அறம் என்று சொல்லுவர். இனி அதன்கண் உடல் முயற்சி சார்வதையே தன்னுடைய திறம் என்று சொல்வர். ஆராய்ந்து கூறுவதால்ை மன ஊக்கம், அறிவுத்திறன், உடல் முயற்சி ஆகிய இம்மூன்றையும் புற வாழ்க்கைக்கு உரியன என்று கொள்வர் ; இவையே ஒருவர்க்குப்புகழைத் தருவனவாகும். 4. புரத்தல் நிலே தன்னை மணமகவைத் தம்போலும் தற்பிறரை முன்னேக்குப் பின்னை முயன்றுயர்த்தி - மன்னியசீர் கல்லரசு மன்பதைக்கு நாளும் கலம்புரக்கும் வல்லாண்மை வாழி வழி 34 பொழிப்பு : ஒருவன் தன்னேயும், தன் மனைவி மக்களே யும் அவர்களைப்போல் தன்னேச்சார்ந்த பிறரையும், முன் உள்ள நிலையைவிடப் பின் உள்ள நிலைக்கு உயர்த்துதல் செய்து, நிலைபெற்று விளங்கும் சிறந்த நன்மை தரும் அரசுக் கும், மக்கள் கூட்டத்திற்கும், நாளும் நலஞ்செய்கின்ற வினே களேப் போற்றிக் காக்கின்ற வலிந்த ஆண்மை வழிவழியாக வாழ்வதாகுக. . - : .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/70&oldid=758241" இலிருந்து மீள்விக்கப்பட்டது