பக்கம்:உலகியல் நூறு.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 21 5. தறுகண் நிலை அமைவுக் கமைந்தமையா ஆறல்லார்க் கார்ந்து சமைவுக் குரன்காட்டும் சால்பும் - இமையாமல் ஏர்ந்தடக்கும் ஓர்பும் இயல்பின் இழிந்தாரை ஊர்ந்தடக்கும் வீறும் உரன் ! 35 பொழிப்பு : உலகியலுக்குப் பொருந்திய வினேகளுக்குத் தானும் பொருந்தியிருந்து, இயல்பு நிலைக்குப் பொருந்தாத வழியைப் பின்பற்ருத தன்மையர் வழித்தான் அறிவால் கிளர்ந்து நின்று, அத்தகைய இயல்பு நிலைகளே அவர்களிடத்து உருவாக்கும் தன்மையில், தன் உள்ள உரனேக் காட்டுகின்ற தகுதியுடன் அவ்வழியில்தான் அஞ்சுதலில்லாமல் அவர்தம் மிகைநிலைகளேக் கடிந்து திருத்துகின்ற கடைப்பிடியும், அவ் வாறு மாற்றற்கியலாமல் இயல்பாகவே விளேந்து நிற்கும் இழிந்த தன்மையரை மேற்சென்று அடக்குகின்ற வீறுண்மை யுமே, சிறந்த வீரம் என்று சொல்லப்பெறும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/71&oldid=758242" இலிருந்து மீள்விக்கப்பட்டது