பக்கம்:உலகியல் நூறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 பெண்மையியல் 1. நான நிலை முகங்கவிக்கும் நம் நாண்பெண்மை ஆண்மை முகக்கும் ! அகங்குமிழ்க்கும் இன்வாரி ஆழ்த்தும் - நுகங்கவிழ்த்த ஏறன்ருே காணவிழ்ந்த ஏர்த்தடங்கண் மங்கைதன் சேறன்ருே ஆண்மைச் செருக்கு ! 36 பொழிப்பு : முகத்தைக் கவிழ்க்கச் செய்யும் நானத்தை யுடைய பெண் தன்மையே ஆண்களேத் தன் வயப்படுத்துவ தாகும். அதுவே உள்ளத்தை மலரச் செய்கின்ற இன்பக் கடலுள் மூழ்குவிக்கும். அத்தகைய நாணம் தவிர்ந்து, நிமிர்ந்து நோக்கும் பெரிய கண்களேயுடைய பருவ மகளிர், தன்மேல் வைக்கப்பெறும் நுகத்தடியை அலேத்து வீழ்க்கும் எருமைக் கடாவைப்போல் அடக்குதற்கரியர்; அத்தகைய வர்களிடத்து, ஆண்களின் பெருமை, அவ்வெருமைக் கடா கிடந்து குழப்புகின்ற சேற்றைப்போல் மிதிபட்டுத் துவைந்து போகும் என்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/72&oldid=758243" இலிருந்து மீள்விக்கப்பட்டது