பக்கம்:உலகியல் நூறு.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 23 2. அடக்க நிலை அடங்கல் இழுக்கன்றே ஆளுள் ஒழுக்கு ! தடங்கல் பெயர்த்தகற்றும் தண்டு - மடங்கலுளத் தீத்தணிக்கும் நீர்மை தெளிவார்க் கதுவன்றே காத்தளிக்கும் பெண்மைக் கழல் ! 37 பொழிப்பு : பெண்கள் அடக்கத்துடன் இருப்பது இழுக்கு ஆகாது ; அஃது ஆண்களே ஆள்கின்ற ஒர் ஒழுக்கமாகும். தங்கள்முன்னேற்றப்பாதைக்குக் குறுக்கீடாக நிற்கும் தடைக் கல்லேப் பெயர்த்தெறிகின்ற இரும்புத் தண்டு ஆகும் அது. அவ்வடக்கம், அரிமாவின் எழுச்சி பொருந்திய ஆண்மை யுள்ளத்தின் தீயைத் தணிக்கின்ற சிறந்த ஒரு பண்பாகும். மனவியலே ஆராய்ந்து தெளிந்த பெண்டிர்க்கு அப்பண்புதான் தம் பெண்மைத் தன்மையைக் காத்து உலகுக்குத் தரும் வெற்றிக் கழலாகும். 3. அழகு நிலை ஒளிநுதல் விற்புருவம் ஊன்றுவிழி பொன்னர் நெளியிதழ் வேய்தோள் கெரிமுலைமட் டன்றே களிதரும் அன்பார் கனிமொழியும் ஆண்மைக் - களிதரும் பெண்மை அழகு! 38 பொழிப்பு : ஒளி பொருந்திய நெற்றியும், வில்போல் வளைந்த புருவங்களும், கூர்ந்து நோக்குகின்ற விழியும், பொன்னிறம் தோய்ந்து, முறுவல் பூக்கும் இதழ்களும், மூங்கில் போலும் வாளிப்பு நிறைந்த மென்தோளும், நெருங்கிப் புடைத்த முலைகளும் மட்டுமே அல்ல, ஆண்களுக்கு மயக் கத்தை யூட்டுகின்ற மகிழ்ச்சி தரும் அன்பு நிறைந்த கனிவான வாய்ச்சொல்லும், பெண்களுக்குச் சிறந்த அழகாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/73&oldid=758244" இலிருந்து மீள்விக்கப்பட்டது