பக்கம்:உலகியல் நூறு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 உலகியல் நூறு 4. உடல் நல நிலே உடலம் உலகியலுக் கொண்கருவி என்றும் கடனதை முன்னறிவாற் காத்தல் - கெடல்தொடரின் அன்புகெடும் இன்புகெடும் ஆன்ற அறிவுகெடும் என்புகெடும் எஞ்சா தெரிக்கு: 39 பொழிப்பு : உடல்தான் உலக வியக்கத்திற்கான சிறந்த கருவி, அதை முன்னறிவோடு நலிவின்றிக் காத்துக் கொள்ளுதலே எல்லார்க்கும் என்றும் தலையாய கடைமயாகும். அது கெடத் தொடங்குமானல், அதன்வழி அன்புணர்வும் இன்ப உணர்வும், நிறைந்து விளங்கிய அறிவுணர்வும் படிப் படியாகக் கெட்டுச் சீரழிவதல்லாமல், உடலின் உருவ நிலேக்கேதுவாகிய எலும்புக் கூட்டையும், இறுதிக்காலத்து எரிகின்ற தீயினுக்கும் எஞ்சுதல் இல்லாமல் கெடுத்துவிடும் 6T of 35, 5. அளவு நிலை எழலியங்கல் உண்ணல் எழிற்புனைதல் பேசல் கழலாடல் ஈட்டல் கணித்தல் - விழலுடல் மெய்யுறுதல் ஈனல் மேலோர் மிகை கடிதல் ஐயாறும் வாழ்க்கைக் களவு. 40 பொழிப்பு : வைகறையில் எழுதலும், மேற்கொள்ளும் விணக்கண் இயங்குவதும், உண்பதும், தன்னைப் புனந்து கொள்ளும் அழகு நிலைகளும், பிறருடன் பேசுகின்ற பேச்சும், ஒடியாடி விளையாடுதலும், பொருளிட்டத்தில் செய்கின்ற கணக்கு முறைகளும், நாளிறுதிக்கண் படுக்கையில் சாய்ந்து ஓய்வு கொள்ளுதலும், தன் கணவனோடு ஊடுதலும், உடல் இன்பம் துய்த்தலும், பிள்ளைகளேப் பெறுதலும், தனக்கு மேனிலையில் உற்றவர்கள் ஒரோவழித் தம் நிலையில் மிகைச் செல்வார்களாயின் அவர்களைக் கடிந்து கொள்ளுதலும் ஆகிய பன்னிரண்டு தன்மைகளும் .ெ பண்டி ர் தம் வாழ்க்கையில் அளவாக கடைப் பிடிக்கத் தக்கனவாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/74&oldid=758245" இலிருந்து மீள்விக்கப்பட்டது