பக்கம்:உலகியல் நூறு.pdf/75

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9 உறவியல் 1. அன்பு நிலே தாயன்பே அன்பு தகுதங்தை அன்பதன் பின் சேயன்பே எண்ணச் சிறந்ததுவாம் - காயின்ப நேயன்பு சான்ருேர் நிலையன்பு மற்றெல்லாம் வாயன்பே துய்ப்பின் வரை. - 41 பொழிப்பு : உலகத்து, தாயினது அன்புதான் அன்பு என்று சொல்லுதற்குரிய உயர் தகுதியைப் பெற்றது. அதன் பின்னர் தகுதியான தந்தை ஒருவரது அன்பு சிறப்பான தாம். அதற்கடுத்த நிலையில் வைத்து எண்ணத்தகுந்தது, ஒரு குழந்தை தன் தாயிடத்து வைத்திருக்கின்ற அன்பாகும். அதன்பின், காய்ப் பருவமாகிய இளமைப் பொழுதின் இன்பவுணர்வுகளுக் கிடையில் ஓர் ஆணுெடு பெண்ணும், பெண்னெடு ஆணும் கொள்ளுகின்ற நேயத்திற் கடிப்படை யாகிய அன்பு சிறந்தது. இனி, அதற்கடுத்தபடியாக உள்ளது, சால்பு நிறைந்து பெரியோர்களின் நிலையான அன்பாகும். இவை தவிர, பிறரிடத்துத் தோன்றுகின்ற அன்புணர்வு எல்லாம், அவ்வவ் வழித் துய்க்கின்ற வரையில் காட்டப் பெறுகின்ற வெறும் வாய்ச் சொல்லால் அமைந்த அன்பே ஆகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/75&oldid=758246" இலிருந்து மீள்விக்கப்பட்டது