பக்கம்:உலகியல் நூறு.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 உலகியல் நூறு 2. சுற்ற நிலை தாமுறுவ துற்றம் தமையுறுவ தொண்சுற்றம் ஏமம் இவையென்ப - ஏழையர்க்கு - காமுறுவ தென்றும் உகப்புடைமை ஈதல் இணைதலென ஒன்றும் பழைமை உணர்ந்து ! - 42 பொழிப்பு : தாம் போய் இணேந்து உறவாடற்குரிய வரே உற்ருர் எனப்பெறுவர் ; தம்முடன் வந்து இனேந்து உறவாடுவர் வலிந்த சுற்றத்தார் ஆவர். ஏழ்மை நிலையில் உள்ளவர்களுக்கு இவ்விரு திறத்தாரும் அரண் போன்றவ ராவர். இவர்கள் விரும்புவது என்றும் ஒருவரின் மகிழ்ச்சியான நிலையையே தம்தம் பழைய தொடர்புகளே மீண்டும் நினேத் துத் தம்தம் உடைமைகளே ஒருவர்க்கொருவர் ஈந்து கொள்ளு தலும், அதன்வழி இணைந்து கொள்ளுதலும் எனப் பொருந்திக் கொள்ளும் உறவு நிலைகளாகும் இவை. 3. நட்பு நிலை நட்பரிது கட்டல் கனிவலிது கட்டாலும் திட்ப முறலரிது தேர்கவே - ஒட்பம் உயர்வென்க உள்ளம் உறழ்ந்துகடு மாறின் அயர்வென்க ஆரு முயிர்க்கு ! 43 பொழிப்பு : நட்பு வாய்ப்பது ஒருவர்க்கு அரியது. அவ்வாறு நட்பு வாய்க்கின் அந்நில அவர்க்கு மிகவும் வலிமையைத் தருவது. அவ்வாறு சிறந்த முறையில் ஒருவரோடு நட்பாடினுலும் அத்தொடர்பு திண்மையுறுதல் மிகவும் அரியது என்று அறிந்து கொள்க. அவ்வாறு திண்மை கொண்டு விளங்கும் நட்பு அறிவுடன் இயங்குவ தாயின் இன்னும் மிகவும் உயர்வாக மதிக்கப்பெறுவதாகும். அத்தகைய நட்பாடிய உள்ளங்கள் முரண்பட்டு நடுநிலை யினின்று மாறுபடின், அந்நட்புணர்வைத் துய்த்து மகிழ்ந்த இரண்டு உயிர்களுக்கும் அந்நிலை மிகவும் அயர்வைத் தருவதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/76&oldid=758247" இலிருந்து மீள்விக்கப்பட்டது