பக்கம்:உலகியல் நூறு.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அயலியல் 鑿 1. நொதுமல் நிலை நொதுமல் பொதுவர் நொடிவார் அவர்கொள்க எதுமற் றவர்க்கினிதென் றேற்க - கதுமென்று தாம்விலகிக் கொள்க தமைத்தவிர்ப்பின் தாங்காதார் ஆமென் றவரணைக ஆங்கு ! 46 பொழிப்பு : நொதுமல் எனப்படுபவர் நட்பும் பகையு மற்றுப் பொதுவான நிலேயிலுள்ளவர்கள் ஆவர். உலக நில்ேகளில் மெலிந்து வாடுபவர் அத்தகையவர்களேத் துணை யாகக் கொள்க. அக்கால், அவர்களுக்கு இனியதாவது எஃது என்று கண்டறிந்து, அதனேயே தாமும் இனியதென்று ஏற்றுக்கொள்க. அவர்கள் தம் தொடர்பைத் தவிர்க்க விரும்புவார் போல் தெரியவரின், விரைந்து அவர் பாலிருந்து தாமே முன்னதாக விலகிக் கொள்க. அவ்வாறு அவர் தொடர்பைக் கைவிட்டுத் தாம் வாழ இயலாதவர், அவர் தம்மை விலக்காததற்குரிய தன்மைகளே ஆம்' என்று ஒப்பி, அவர்களே முன்பு நின்ற நிலையிலேயே அணைந்து கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/78&oldid=758249" இலிருந்து மீள்விக்கப்பட்டது