பக்கம்:உலகியல் நூறு.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 29 2. வெறுக்கை நிலை வினைவெறுக்கை உள்ளுறழ்ச்சி! வேண்டார் தவிர்க்க முனைவதொன் றுண்டால் முகக்க - புனைவதுவும் கோள்வரை யிட்ட குனிவென்க ஆங்கதுவும் நாள்வரை யிட்ட நடை! 47 பொழிப்பு: புற வினைகளின்மேல் ஏற்படும் வெறுப்புக எாலேயே ஒருவரின் உள்ளத்தில் மாறுபாடு தோன்றும். எனவே ஒருவரின் உள்ள மாறுபாட்டை விரும்பாதவர்கள் அவ் வுணர்வுக்கடிப்படையாக உள்ள தம் புற வினேகளேத் தவிர்த்துக் கொள்க. ஒருவர் துணேயோடு தாம் முயன்று செய்யும் நிகழ்வு ஒன்று உண்டாயின், அவ்வகையில், அவரின் மனவுணர்வுடன் ஒத்து இயங்கி அதனே வெற்றி கொள்க. அவ்வாறு ஒத்து இயங்கும் புறவியக்க நிலேயும், தமக்குரிய ஒரு குறிக்கோளே நிறைவேற்றிக் கொள்ளும் ஒரு பணிவு என்று கருதிக் கொள்க. அவ்வாறு நடப்பதுவுங்கூட ஒர் எல்லேப்பட்ட கால வரையறையைக் கொண்டதாகும் என்க. 3. முரணிலை உள்ளம் உகப்பே உறுவினையே சொல்லாட்டே கள்ளத்தியங்கின் கடுமுரணும் - கொள்ளத் தக்க தெனில்தாழ்க தாழாமை முற்றுமெனில் ஒக்க விடல்தொடர்பை ஓர்ந்து ! 48 பொழிப்பு : உள்ளத்தின் மகிழ்ச்சியும், அதன் வயப் பட்ட வினேயும், அதன் தொடர்பாகிய சொல்லாடல்களும் பொய்யான நிலையில் இயங்குவன ஆயின், அவையே இயல்புக்கு முரண்பட்ட நிலைகளாம். அவை ஒருவன் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாயின், தன் நிலைகளைத் தாழ்த்திக் கொண்டு ஏற்றுக் கொள்ளலாம். இனி, அந்நிலைகளே முற்றிய நிலைகளாயிருந்து அவற்றைப் பொரு தார் அவற்றைச் செய் வாரிடத்து நின்று நீங்கி அவர் தொடர்பை அறிவோடு எண்ணி, முற்றும் நீக்கிக் கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/79&oldid=758250" இலிருந்து மீள்விக்கப்பட்டது