பக்கம்:உலகியல் நூறு.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi இவர்கள் அனேவர்க்கும் நாம் கூறும் விடை இந்நூலுள் ஒரு பாட்டாகவே (3) மலர்ந்துள்ளது. அதில் இவ்வுலகத் துள்ளார் அறிவு எப்பொழும் மருட்சியுடையதாகவே இருக்கும் என்பது சொல்லப் பெற்றுள்ளது. இருப்பினும், அறிவுநிலை, இடத்தானும், பொருளானும், காலத்தானும், கருவியானும் கரணத்தானும், அறிவானும், உள்ளத்தானும், உணர்வானும் சொல்லானும், சொற்பொருளானும், தொகுப்பானும், விரிப் பானும், விளக்கத்தானும் என்றைக்கும், எவர்க்கும், பல்வேறு மாறுபாடுகள் கொண்டே இயங்கும் தன்மை யுடையது. இவ் வ&னத்து மாறுபாட்டு நிலேகளேயும் அளாவி யறிந்தோரது மெய்ப்பொருளுண்மை என்றும் மாருத தன்மை யுடையது. ஆற்றலேயும் பொருளேயும் மாற்றமின்றி உள்ளது உள்ளபடியே பிரித்துணர்வார் உலகத்து உளர். அவர்தம் கூற்றுவாயி லாகவே அவர் அறியப் பெறுவர். அவ் வறிவவரது அறிவு மாட்சி காலத்தாலேயே தேர்வு பெறற் குரியது. அதனே எளிதே மறுத்து விடுதலும் அத்துணே இயல்வதன்று. எனவே உணர்வார்க்கு உணர்வதும், உணர்வு மழுங்கினர்க்கு மறை வதுமாகிய மெய்ப் பொருளுண்மையை, முதற்கண் ஒருவர் கற்றறிவது கடனுகும். அந்த வகையில் எழுந்ததே இந்நூல் 6Tö了ö。 . வழக்கம்போல், இந்நூலேயும், கோவை பெருஞ்சித்திரனர் நூல் வெளியீட்டுக் குழுவே வெளியிடுகிறது. இக்குழுவின் இயக்குநராகிய தென்மொழி. ப. துரையரசளுர், என் நூல்களே வெளியிட்டு மக்கட்குக் கொண்டு செலுத்தும் பணியையே தம் தண்டமிழ்த் தொண்டாகவும், வாழ்நாட் கட்மையாகவும் கொண்டிருக்கிருர், அவர்தம் தூய தமிழ்த் தொண்டுக்கு என்றும் என் நெஞ்சு நிறைந்த வாழ்த்துகள் உரியவாகும். அவரின் தந்நலமற்ற தூய தமிழ்த் தொண்டுக்குத் துணை நிற்கும் அனைத்துத் தமிழுள்ளங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியும் வாழ்த்தும் அவர்களின் ஆர்வத்தையும் அரு முயற்சியையும் தமிழகம் நன்கு ஊக்குவித்துப் பயன்படுத்திக் கொள்ளுமாக. ** > - .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/8&oldid=758251" இலிருந்து மீள்விக்கப்பட்டது