பக்கம்:உலகியல் நூறு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 உலகியல் நூறு 4. காழ்ப்பு நிலை பொருளால் புகழால் பொலிதிறனுல் கல்வித் தெருளால் திரள்திரிபு தேர்க - அருளளியால் மாற்ருர்க் கதுகாழ்த்து மன்னுயிரைத் தேய்த்தெடுக்கும் கூற்ருகும் நெஞ்சங் குடைந்து. . 49 பொழிப்பு : ஒருவர்க்கு வந்து சேரும் பொருளாலும், புகழிலுைம், நிறைந்த திறன்களாலும், கல்வித் தெளிவினுலும் மற்றவரிடத்துத் திரள்கின்ற திரிபுணர்வைத் தேர்ந்துகொள்க. பிறரிடத்து முகிழ்க்கும் அவ்வுணர்வைத் தம் அருளாண்மை யால் மாற்றவியலாதவர்க்கு அது காழ்ப்புக் கொண்டு, தம் நெஞ்சத்தை குடைந்து வருத்தித் தம்முடைய நிலையான உயிரைச் சிறிது சிறிதாகத் தேய்த்து, இறுதியில் அதனே உட லினின்று பிரித்தெடுக்கும் கூற்ருக வந்து நிற்கும். 5. பகை நிலை வெறுக்கை முரணுகி வேர்விட்டுக் காழ்த்துப் பொறுக்கவிலாப் புன்பகையாப் பூக்கும் - மறுக்கை கருத்தென்னின் ஆடி வினையென்னின் காத்துத் திருத்துண்டேல் தேறிக் கொளல். 50 பொழிப்பு : ஒருவரின் உள்ளத்தில் ஏற்படும் வெறுப்பு, வினேகளில் முரண்பட்டு நின்று, பின் வேர்விட்டு வளர்ந்து முதிர்வுற்றுத் தாம் பொறுத்தற் கியலாத புல்லிய பகையாகப் பூத்துவிடும். எனவே, மறுத்தற்குரியது. கருத்தளவாயது என்னின் அதனே உரையாடிச் சரிசெய்தலும், வினேயள வாயது என்னின் தன்னேப் பொறையால் காத்துக் கொண்டு திருத்துவதற்குரியதென்னின் திருத்தி அப்பகையினின்றும் தம்மைத் தேற்றிக்கொள்க.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/80&oldid=758252" இலிருந்து மீள்விக்கப்பட்டது