பக்கம்:உலகியல் நூறு.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வினையியல் o: 1. சொன் னிலே உள்ளமறி வொத்த துறுசொல்லாங் கொன்றிரண்டு கொள்ளளவே சொற்பயனென் கொள்க - பொள்ளலுறின் எள்ளுப் படுஉங்; இழிபடுஉம் ஏற்றவினை தள்ளுப் படுஉந் தகை. 5? பொழிப்பு : உள்ளவுணர்வும் அறிவுணர்வும் தம் அள வான் ஒத்து வெளிப்படும் சொல்லே பொருந்திய சொல்லாம். அவ்வுணர்வுகளுள் ஒன்றையோ அன்றி, இரண்டையுமோ அடிப்படையாகக் கொள்ளுகின்ற அளவைப் பொறுத்தது வெளிவரும் சொல்லின் பயன் என்று கருதுக. அந்நிலையில் இடையீடுபடின், வெளிப்படும் சொல் இகழப்படும் ; படவே, அதல்ை மேற்கொண்ட வினே இழிவு பட்டுப்போகும் ; போகவே, அதைச் செய்பவரின் தகுதியும் புறக்கணிக்கப் பட்டு விடும். - 2. செயளிை2ல ஒப்பம் அறிவூக்கம் ஊன்றுதிறன் உண்மையெனக் செப்பமைங் தற்றே செயலென்ய: - செப்பத்தும் ஒட்பமும் திட்பமும் ஓர்ந்த உரமென்ப; நுட்பம் இயற்கை நுழைபு. 52 பொழிப்பு : ஒரு செயலே மேற்கொண்டவரின் மன ஒப்புதல், அறிவு, உடல் முயற்சி, ஈடுபடுகின்ற திறன், உண்மை எனும் ஐந்து நிலேகளேப் பொறுத்தே அச்செயலின் செப்பமும் இருக்கும். அந்தச் செப்பத்துடன் செயல் தூய்மையும், உறுதிப்பாடும் அச்செயல்வகையில் அவர் ஆராய்ந்தறிந்த திறனைப் பொருத்தன. அதன் நுட்பச் சிறப்போ அவருக்கியற்கையாகக் கைவந்த அறிவர்ண் மையைக் கொண்டதாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/81&oldid=758253" இலிருந்து மீள்விக்கப்பட்டது