பக்கம்:உலகியல் நூறு.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32 உலகியல் நூறு 3. முயற்சி நிலை முயற்சி முடிவுக்கு முன்வாயில் மூண்ட பயிற்சி உயர்வின் படியாம்! - அயர்ச்சியிலா ஊக்கம் உழைப்புண்மை உண்டால் ஒசிவெனினும் ஆக்கம் உறுதியெனல் ஆம் ! 53 பொழிப்பு : ஒருவரின் முயற்சியே தாம் மேற்கொண்ட செயலின் முடிவுக்கான நுழைவு வாயிலாகும். அவருக்கு அத் துறையில் திரண்டு நின்ற பயிற்சியே அச்செயலில் அவரடை யும் வெற்றிக்குப் படிநிலையாகும். சோர்வில்லாத மன ஊக்க மும் உடலுழைப்பும், உண்மையுணர்வும் ஒருவர்க்கிருக்கு மால்ை, இடையில் ஒரோவொருகால் வினேச்சரிவு ஏற்பட்டா லும், இறுதி நிலையில் அவர்க்கு ஆக்கம் உறுதியாக வந்தெய் தும் என்க. 4. ஊக்க நிலே பொருட்குறை யாவும் புலக்குறைவே : ஐயம் மருட்கறைகள் சூழின் மழுக்கே ! இருட்குறைந்த ஒள்ளியோர் மேன்மேலும் ஒள்ளியரே செய்வினையால் வெள்ளியோர் மேன்மேல் வெளிறு. 54 பொழிப்பு : செயலுக்குரிய கருவியின் குறைகள் யாவும் செய்பவரின் அறிவுக் குறைவே. அந்த அறிவுக் குறைவோடு செய்யப்புகும் வினேக்கண் உண்டாகும் ஐயமும், மருட்சியும், குறைகளும் சேர்ந்துவிட்டால் வினே மழுக்கம் ஏற்பட்டுவிடும். அறியாமை குறைந்த அறிவுடையோர் தாம் செய்யப் புகுந்த வினேயின் ஈடுபாட்டால் மேன்மேலும் அறிவுத்திறனே பெற்று விளங்குவர். அறிவுக் குறைந்த மூடரோ தாம் செய்யப் புகுந்த வினேயின் ஈடுபாட்டால் மேன்மேலும் மூடராகவே விளங்குவர். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/82&oldid=758254" இலிருந்து மீள்விக்கப்பட்டது