பக்கம்:உலகியல் நூறு.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 33 5. ஊதிய நிலை ஊதியம் என்ப துழைப்பெச்சம் ! ஒன்றுண்டால் யாதினும் யாரும் யாங்காற்றும் - தீதியலா ஒண்ணுேக்கம் ஒன்றே உயிர்க்கு நுகர்வாகும் மண்ணுேக்கம் மற்ருர்க்கே மன்! 55 பொழிப்பு : ஊதியம் என்று சொல்லப்பெறுவது ஒருவ ரின் உழைப்பிற்குப் பின் நிற்கும் மீதியாகும். அப்பயன் ஒரு வழியில் கிடைக்கும் என்ருல் எத்தகைய வினேக்கண்ணும் எவரும் எவ்விடத்தும் ஈடுபட முன்வருவர். தீங்கு சேராத உயர்ந்த நோக்கத்தினடிப்படையில் வரும் ஊதியமே உயிர் களின் நுகர்ச்சிக் குரியதாகும். மற்றபடி உலகியல் நோக் குடைய ஊதியங்கள் பிறருக்கே பயன்படுவனவன்றி உழைப்ப வருக்குப் பயன்படாதாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/83&oldid=758255" இலிருந்து மீள்விக்கப்பட்டது