பக்கம்:உலகியல் நூறு.pdf/84

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

量2 செல்வ இயல் § 1. ஈட்டல் நிலை ஈட்டம் அறிவுழைப்பாங் கேற்கும் இயல்பறிந்து காட்டம் மிகுக்கின் நலன்மிகுக்கும் - வாட்டமெலாம் ஊக்கத்தின் ஒற்கம் : உறுசெல்வம் ஓங்குவினை ஆக்கத்திற் காமன் றணிக்கு ! 56 பொழிப்பு : வருவாய் என்பது அறிவையும் உழைப்பை யும் பொறுத்தது. தமக்குற்ற அறிவும் உடலும் ஏற்றுக் கொள்கின்ற வினேயின் இயல்பை ஒருவர் அறிந்து கொண்டு, அதில் தம் நாட்டை மிகுப்பாராயின் வந்து சேரும் நலன்கள் மிகுதியாகும். துயரம் என்பதெல்லாம் முயற்சியின் தளர்ச்சியே ஆகும். வந்து சேர்கின்ற செல்வம் உயர்ந்த செயல்களே ஆக்குவதற்கே ஆகும்; அழகுக்கோ ஆரவாரத்திற்கோ அன்று. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/84&oldid=758256" இலிருந்து மீள்விக்கப்பட்டது