பக்கம்:உலகியல் நூறு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர் 35 2. காத்தல் நிலை காணிப்பு காத்தல் கருதல் கவலுறுதல் கோணிப்பே உள்ளங் குலைவுறுதல் - பேணித்தன் ஆக்கங் கணக்கறிந்தே அல்வழிக்குக் காப்பிட்டால் ஏக்கங் குறைக்கும் இழிவு: 57 பொழிப்பு : காத்தல் என்பது ஒரு வினையைக் கண் காணித்தலும் அதன் நலத்தையே எண்ணுதலும், அதன் சரிவுக்கு வருந்துதலும் ஆகும். உள்ளம் தன் உறுதியில் குலேவுறுமானுல் வினேயில் நொடிதல் நேரும். இவ்வகையில் எண்ணி வினேநிலையைப் பேணிக்கொண்டு, வருகின்ற ஆக்கத்தைக் கணக்கிட்டு, வினேக்குப் பொருந்தாத வழிகளில் தன் உள்ளம் செல்வதைத் தடுத்துக் கொண்டு இயங்கில்ை ஒரோவழி வினேச்சரிவு வந்தாலும் அதனுல் வரும் மனத்துன்பத்தை அது குறைத்துவிடும். 3. இழத்தல் நிலே இழப்பறி யாமை உழைப்பின்மை என்றும் குழப்பில் துறைப்புலத்தார் கொள்க - உழப்பழியார்க் கில்லாரும் தேக்கமொன் றுற்றக்கால் அஃதான்றே வெல்லாகும் ஊக்க விறல். - - 58 பொழிப்பு : ஒரு வினேயின் முடிவில் இழப்பு ஏற்படு மாயின் அஃது அவ்வினே பற்றிய அறியாமையாலும், அதனில் முற்றும் ஈடுபட்டு உழைக்காமையாலும் ஏற்பட்ட தென்றெண்ணிக் கொள்க என்றும் மேற்கொள்ளும் வினைத் துறையில் குழப்ப மில்லாது தெளிந்த அறிவுடையவரைத் துணேயாகக் கொள்க. முயற்சி அழியாதவர்க்கு என்றும் வருவாயில் தேக்கம் ஏற்படுவதில்லை. அவ்வாறு ஒருகால் எற்படுமாயின் அதுவே அம்முயற்சியில் அவர் பொருந்தி வெற்றி பெறுவதற்குரிய ஊக்கத்தைக் கொடுக்கும் சிறப்பு நிலையாகும் என்று தெளிக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/85&oldid=758257" இலிருந்து மீள்விக்கப்பட்டது