பக்கம்:உலகியல் நூறு.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 உலகியல் நூறு 4. கல்வி நிலை காட்சி கருதல் கவனித்தல் கற்பவற்றை ஆட்சிப் புலனுழுதாங் காய்ந்தறிதல் - மாட்சி தெளிதல் தெளிந்தவற்றைத் தேர்தலெனக் கல்வி ஒளிர்தல் உயர்தல் உயிர்க்கு: 59 பொழிப்பு : ஒருவர் கட்புலனுல் ஆர்வத்துடன் காண் கின்ற காட்சி வழியாகவும், கண்டவற்றை மனவுணர்வுக்குட் படுத்தி அவை பற்றிக் கருதிப் பார்க்கின்ற வழியாகவும், அதன்வழி கிடைக்கப் பெற்ற மனவுணர்வுைக் கொண்டு, மேலும் மேலும், காட்சியால் மட்டுமன்றிக் கேள்வியாலும், நுகர்ச்சியாலும், சுவையாலும், ஊறுணர்விலுைம் பெறற்குரிய உணர்வு நிலைகளே ஊன்றிக் கவனித்தல் வழியாகவும், அவ்வாறு அறிந்தவற்றைத் தமக்குற்ற அறிவுப் புலனது ஆளுமையின் கீழ்ப்படுத்தி, ஆராய்ந்து அறிந்து, அவற்றின் பெருமையைத் தெளிந்து கொள்ளுதல் வழியாகவும், அவ்வாறு தெளிந்த பல்வேறு நிலைகளுள் என்றும் உளதாகிய மெய்நிலையைத் தேர்ந்து கொள்ளுதல் வழியும், கல்வி சிறந்து விளங்குதல், படிப்படியாய் உயிர்களே உயர்த்துவதற்காம் 莎Y”ö”、莎。 5. பண்பு நிலை பண்புளத்துச் செல்வம்; பருச்செல்வம் புன்முயல்வால் - மண்பிறந்த யார்க்கும் மலியுமாம் - நண்புறுதி காக்கும் கடைவலிக்கும் கற்ருர் கவினுயர்த்தும் ஆக்கும் புகழ்நலன்கள் ஆம்: 60 பொழிப்பு : பண்பு, உள்ளத்தின் செல்வம். பிற பருமைச் செல்வங்கள் புல்லிய முயற்சிகளாலும் இம்மண்ணுலகில் பிறந்திருக்கின்ற எவரிடத்தும் மலிந்துவிடும். எனவே அது சிறப்புறுவதில்லே. ஆனல் உலகின் நுண்மைச் செல்வமாகிய இப்பண்புச் செல்வம், நட்பின் உறுதியைக் காத்துக் கொள்ளும்; தம் வாழ்வியல் போக்கிற்கு மிக்க வலிமையை உண்டாக்கும்; கற்ற அறிஞர்க்கு இப்பண்புச் செல்வம் இருப்பின் அவர்களது பெருமையை அது மேலும் உயரச் செய்யும். எல்லாவகைப் புகழ்ச்சிகளேயும், வாழ்வு நலன்களையும் அது வருவித்துக் கொடுக்கும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/86&oldid=758258" இலிருந்து மீள்விக்கப்பட்டது