பக்கம்:உலகியல் நூறு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒப்புரவியல் 臺 1. ஊண் நிலை ஒக்க உணவும் உழைப்பும் ஒருங்கமைக்கும் தக்க முறையே தலையென்.க - பக்கவெலாம் மாணன்றி வேண்டும் மனத்து விழைவென்ப ஊணின்றி இல்லை உயிர்! 61 பொழிப்பு : எல்லார்க்கும் பொருந்தும்படி உணவு வாய்ப்புக்களேயும் உழைப்பு வாய்ப்புக்களேயும் ஒரே நிலையாக அமைத்துக் கொடுக்கின்ற தகுதியான நெறிமுறைதான் சிறந்தது என்க. அவற்றின் புறத்தாய பிற நலன்கள் எல்லாம் பெருமைக்குரியனவும் வேண்டும் என்கின்ற மனத்தின் விழைக்குரியனவுமே ஆகும். உயிர் வாழ்க்கை உணவின்றி இல்லையாகலின், பிற நலன்களுக்குரிய அமைப்புக்களைக் காட்டிலும் உணவு நிலே வாய்ப்புகளே முதல் தேவை என்க. 2. நடுவு நிலைமை தானும் பிறவும் தனியென் றறியாமை மானும் மனத்தின் மலைவிடர்கள்! - ஊனுடம்பு வாய்த்த உயிர்க்கெல்லாம் வாழ்க்கை பொதுவென்றே காய்த்தல் அறுத்தல் கடன் ! 62 பொழிப்பு : தாமும் பிற உயிர்களும் இவ்வுலக நலன்களேத் துய்ப்பதில் தனித்தனியாம் என்னும் அறியாத தன்மையால் மயங்குகின்ற மனத்தினது மலிந்த தன்மைகளே இடர்களாகும். ஊனினுல் நிறைந்த உடம்புகள் வாய்க்கப் பெற்ற உயிர்கள் எல்லாவற்றிற்கும் இவ்வுலகின்கண் அமைந்த வாழ்க்கை பொதுவினதாகும் என்று கருதி, இங்கு விளேகின்ற நலன்களே யெல்லாம் அனேத்துயிர்களும் வேறுபாடின்றி எடுத்துக் கொள்ளுதலே அவ்வவற்றுக்குரிய கடமையாகும். r -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/87&oldid=758259" இலிருந்து மீள்விக்கப்பட்டது