பக்கம்:உலகியல் நூறு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 உலகியல் நூறு 3. ஈகை நிலை உள்ளொண்மை ஈகை உயிர்கள் நலம்பேணும் கள்ளண்மை மாந்தர்க் கடனுகும் - வள்ளண்மை என்றும் உயர்வன்றே இல்லாமை பேணுமொரு தொன்று முயல்வே அது ! 63 பொழிப்பு : உள்ளத்தின் விளங்கிய தன்மைதான் ஈகை. உயிர்களின் நலத்தைப் பேணிக் காக்கின்றதும், அவர் நலத்தைக் கள்ளத்தால் திருடிக் கொள்ளாததுமான தன்மை மக்களுக்கே உரிய கடமையாகும். இப்பொதுவான தன்மையைப் பேணுமல், ஒருவரின் மீறிய நலன்களைப் பிறர்க்குக் கொடையாக அளிக்கின்ற வள்ளல் தன்மை என்றும் உயர்வாகாது. அது குமுகாயத்தின் ஒரு சாரார்க்கு இல்லாத தன்மையைப் பேணி வளர்க்கின்ற பழைமையான ஒருவகை முயற்சியே ஆகும். - 4. துன் பின் ய நிலை கல்வி தொழிலிட்டம் துய்ப்புக் களிப்பைந்தும் செல்வர்க்கே என்னும் நிலைசெகுக்க-இல்வகையால் துன்புறுவார் இன்றித் துடைக்க தொகையுலகில் இன்புறுதல் எல்லவர்க்கும் என்று. - 64 பொழிப்பு : கல்வி, தொழில், ஈட்டம், துய்ப்பு, களிப்பு ஆகிய ஐந்து நலன்களும் செல்வர்களுக்கே உரிய வாய்ப்பு என்னும் நிலையைக் கொல்லுக. இல்லாமை நிலைகளால் துன்புறுவார் இல்லாமல் தவிர்த்து விடுக ; அனேத்து நலன் களும் நிறைந்த உலகில், அவற்ருல் பெறுகின்ற இன்பநிலை எல்லார்க்கும் உரியது என்று எண்ணி. ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:உலகியல்_நூறு.pdf/88&oldid=758260" இலிருந்து மீள்விக்கப்பட்டது